ஹீரோவானார் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்; இசை, இயக்குநர், ஹீரோயின்?

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது!

Updated: Dec 1, 2019, 03:59 PM IST
ஹீரோவானார் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்; இசை, இயக்குநர், ஹீரோயின்?

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது!

தனது சரவணா ஸ்டோர் விளம்பர படங்களில் நடித்து வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன். இந்நிறுவனத்தின் விளம்பர படங்களில் அதன் உரிமையாளர்களுள் ஒருவரான சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடித்து வருகிறார். அதற்கு பல விமர்சனங்கள் எழுந்தாலும் அதை அவர் பொருட்படுத்திக் கொள்வதில்லை. அவர் திரைத்துறையில் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் ஏ.வி.எம் சரவணன் நடிகர் பிரபு, விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சரவணா ஸ்டோர்ஸ் அருள் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்ட இயக்குநர்கள் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டதாகவும், அதனால் புதுமுகத்தை நடிகையாக அறிமுகம் செய்வதாகவும் கூறப்படுகிறது.