தமிழகத்தில் 8% மாநில வரியை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய அவர்,
அமேசான், நெட்பிளிக்ஸ் 100 நாட்கள் வரை படங்களை வெளியிடக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீப காலமாக புதிய திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற்று தரவில்லை. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
மேலும் உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை நடிகர்கள் ஏற்று தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். திரைப்படங்கள் வெளியான 100 நாட்களுக்கு பிறகு தான் நெட்பிளிக்ஸ் போன்ற கணினி மயமான தளங்களில் வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் 8% மாநில வரியை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் மார்ச் 1 முதல் திரையரங்கங்கள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.