நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்!

பிரபல காதலர்களான நயன்தாராவும் - விக்னேஷ் சிவன் ஜோடி விரைவில் பிரிந்துவிடுவார்கள் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்..!

Written by - ZEE Bureau | Last Updated : Feb 26, 2021, 09:01 AM IST
நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்!

பிரபல காதலர்களான நயன்தாராவும் - விக்னேஷ் சிவன் ஜோடி விரைவில் பிரிந்துவிடுவார்கள் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்..!

தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கினறனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வரும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "நானும் ரவுடிதான்" (Naanum Rowdy Dhaan). இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள் என்றும், இவர்களது ஐந்து ஆண்டுகளுக்கு மேலான காதல், இந்தவருடம் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

ALSO READ | மனைவியாகும் நயன்தாரா.. ஆனால் கணவர் விக்னேஷ் சிவன் இல்லை..

விக்னேஷ் சிவன் தன் காதலி நயன்தாரா, விஜய் சேதுபதி (Vijay Sethupathi), சமந்தா ஆகியோரை வைத்து "காத்து வாக்குல ரெண்டு காதல்" (Kaathu Vaakula Rendu Kadhal) என்ற படத்தை இயக்கி வருகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடத்தினர். காதலர் தினத்தன்று நயன்தாராவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் விக்கி.  

இந்நிலையில், பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் (Bayilvan Ranganathan) அவர்கள் நயன்தாரா மற்றும் விக்கியின் காதல் கதை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்., நயன்தாரா, விக்னேஷ் சிவனின் காதல் இன்னும் ஓராண்டு கூட தாக்குப் பிடிக்காது, பிரியப் போகிறார்கள் என்று கூறியிருக்கிறார். பயில்வான் ரங்கநாதனின் பேச்சு நயன்தாரா ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. 

திரையுலகினர் பற்றி தற்போது பரபரப்பாக தகவல்களை தெரிவித்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அவர் நயன்தாரா பற்றி பேசுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடதக்கது. 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News