தனுஷ் நடித்துள்ள அட்ராங்கி ரே பட ட்ரெய்லர் வெளியீடு

தனுஷ், சாரா அலிகான், அக்‌ஷய்குமார் ஆகியோர் நடித்துள்ள 'அட்ராங்கி ரே" பட ட்ரெய்லர் ஓடிடி தளத்தில் வெளியானது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2021, 05:02 PM IST
தனுஷ் நடித்துள்ள அட்ராங்கி ரே பட ட்ரெய்லர் வெளியீடு title=

தனுஷ், அக்‌ஷய்குமார்  மற்றும் சாரா அலி கான் நடிக்கும் ஹிந்தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ராஞ்சனா படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் தனுஷ் இணைந்திருக்கும் படம் அட்ராங்கி ரே (Atrangi Re). இந்தப் படத்தில் தனுஷுடன் (Dhanush) இணைந்து அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார்.

ALSO READ | அடுத்த 4 மாதங்களில் வெளிவர இருக்கும் டாப் ஹீரோ படங்கள்!

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை (24.11.2021) வெளியாகவுள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது தனுஷ், சாரா அலிகான், அக்‌ஷய்குமார் ஆகியோர் நடித்துள்ள 'அட்ராங்கி ரே" பட ட்ரெய்லர் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.

 

 

இதற்கிடையில் இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராய் இருக்கும் நிலையில், ‘அட்ராங்கி ரே’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. 

தனுஷின் முதல் ஹிந்திப் படமான ராஞ்ஜானாவை ஆனந்த்  எல். ராய் 2013-ஆம் ஆண்டில் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தனுஷின் மாறன் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!

Trending News