Kovilpatti Boy Murder Case Accused Arrested: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இந்த தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி கடந்த திங்கட்கிழமை (டிச. 9) வீட்டில் இருந்தபோது மாயமானார். மறுநாள் செவ்வாய்க்கிழமை சிறுவன் அவனது வீட்டில் பக்கத்தில் உள்ள மற்றோரு வீட்டின் மொட்டை மாடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சிறுவன் காணாமல் போன போது ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிராம் தங்க மோதிரம் அணிந்து இருந்ததாக கூறப்பட்டது. அவரை கண்டெடுத்த போது நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், சிறுவன் கருப்பசாமி தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறுவன் மரணத்தில் நீண்ட நாளாக மர்மம் நீடித்து வரும் நிலையில், போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக அவனது பெற்றோர் தற்கொலைக்கும் முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, போலீசார் அவர்களை சாமாதானப்படுத்தி இந்த வழக்கில் உண்மையைக் கண்டறிவோம் என நம்பிக்கை அளித்தனர். தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பிக்கள் மற்றும் 4 டிஎஸ்பிக்கள், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட போலீசார் இணைந்து பத்து தனி படைகள் அமைக்கப்பட்டது. தொடர் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் தீவிர விசாரணை
சிறுவன் வீட்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் இருப்பவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதுவரை அக்கம் பக்கத்தினர் உள்ள 50-க்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று தனிப்படையினர் விசாரித்தனர். அதில் 9 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
கோவில்பட்டியில் பணியாற்றி வெளி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்களை அழைத்து வந்தும் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து நான்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் 6 நாட்கள் ஆகியும் தற்போது வரை சிறுவன் மரணம் அடைந்ததற்கான காரணமும் தெரியவில்லை, அதற்கான காரணமானவர்களையும் போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினர்.
பெற்றோர் நடத்திய போராட்டம்
குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் அந்த பகுதி சேர்ந்த மக்களை குற்றத்தை ஒத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தொடர்ந்து அடித்து மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி மெயின் ரோட்டில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் செய்ய முயன்ற சிறுவனின் பெற்றோர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அது மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்த சிறுவனின் தாய் பாலசுந்தரியை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீஸ் ஜிப்பில் ஏற்ற முயன்றனர். அவரது கணவர் அவர்களை தடுக்க முற்பட்டு மல்லுக்கட்டினர். இருப்பினும், வலுக்கட்டாயமாக பாலசுந்தரியை குண்டு கட்டாக தூக்கி போலீஸ் ஜிப்பில் திணித்து அழைத்து சென்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் படிக்க | தமிழகம் திரும்பிய சத்குரு..! கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை பிரம்மாண்ட வரவேற்பு
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் ஓரிரு நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர்.
அழுத்தம் என்ற பெயரில் உண்மையான குற்றவாளியை விட்டுவிட்டு பொய்யான நபரை தங்களிடம் சொல்லக்கூடாது, உரிய விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துவிட்டு தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
குற்றவாளி கைது... அதிர்ச்சி பின்னணி!
இந்நிலையில், சிறுவன் கொலை வழக்கில் சிறுவனின் வீட்டின் பின்புறம் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் கருப்பசாமி தான் குற்றவாளி என காவல்துறை அறிவித்துள்ளது. சிறுவன் கருப்பசாமியை பலவந்தப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. விசாரணை முடிவில் தெரியவந்து ஆட்டோ டிரைவர் கருப்பசாமியை குற்றவாளியாக உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்,
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அப்பகுதியில் இருந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து விசாரித்த போது ஆட்டோ டிரைவர் கருப்பசாமி பற்றி சிலர் தகவல்களை கொடுத்ததாகவும், அந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் கருப்பசாமி குற்றவாளி என அடையாளம் கண்டு கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கருப்பசாமியிடம் அறிவியல் ரீதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, உறுதி செய்ய பின்னரே இதை போலீசார் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
போலீசாருடனே இருந்த குற்றவாளி
சிறுவன் காணாமல் போனது முதல் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றவரை ஆட்டோ டிரைவர் கருப்பசாமி உடன் இருந்துள்ளார். போலீசாருடன் சேர்ந்து சிறுவனை தேடுவது போல் நடித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என்று அறிவித்துள்ள ஆட்டோ கருப்பசாமியும், சிறுவனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ரூ.6,000 நிதியுதவி பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ