பாராசிட்டமால் மாத்திரை அடிக்கடி சாப்பிடுவீர்களா.... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Side Effects of Paracetamol: பாரசிட்டமால் மாத்திரையை, அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு, இதயம், சிறுநீரகம், இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 15, 2024, 12:54 PM IST
  • பாரசிட்டமால் மாத்திரையை, அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு, ஏற்படும் பக்க விளைவுகள்.
  • ஆராய்ச்சியாளர்கள் 1,80,483 பேர்களின் உடல்நலப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
  • வயிற்றுப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்பு 24 முதல் 36 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
பாராசிட்டமால் மாத்திரை அடிக்கடி சாப்பிடுவீர்களா.... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் title=

இந்தியாவில் காய்ச்சல் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு பெரும்பாலானோர் பாரசட்டாமால் மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். பொதுவாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல், நாமாகவே மருந்துகள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து, மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில், அடிக்கடி பாரசட்டாமல் மாத்திரைகள் உட்கொள்வதால், ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய ஆய்வு ஒன்றில் வெளியான தகவல்

பாரசிட்டமால் மாத்திரையை, அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு, குறிப்பாக 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு, இதயம், சிறுநீரகம், இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது. லேசான காய்ச்சல் அல்லது வலியிலிருந்து நிவாரணம் பெற அடிக்கடி பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மருந்து வயதானவர்களுக்கு பாதுகாப்பானது அல்ல என பிரிட்டனின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 பாராசிட்டமால் அதிகம் எடுத்துக் கொண்டவர்களின் உடல் நல அறிக்கை

பாரசிட்டமால் மாத்திரையை, அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு குடல், இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதோடு குடல், இரைப்பையில் புண்கள் மற்றும் இரத்தப்போக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில், 1,80,483 பேர்களின் உடல்நலப் பதிவுகளை ஆய்வு செய்தனர். மீண்டும் மீண்டும் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டவர்களின் உடல் நல அறிக்கையை, ஒரு போது பாரசிட்டமால் மாத்திரையை சாப்பிடாத 4,02,478 பேர்களின் உடல் நல அறிக்கையுடன் ஒப்பிடப்பட்டன. இந்த பகுப்பாய்வின் முடிவுகள் பாராசிட்டமால் அடிக்கடி எடுத்துக் கொண்டவர்கள் சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை கொண்டிருந்தனர்.

உடல்நலப் பிரச்சினைகள் 24 - 36 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு

பாராசிட்டமால் உட்கொள்வது தீவிர செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர், இதில் வயிற்றுப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்பு 24 முதல் 36 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இது தவிர, சிறுநீரக நோய் அபாயம் 19 சதவீதமும், மாரடைப்பு அபாயம் 9 சதவீதமும் அதிகரிக்கலாம். அதேசமயம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயமும் 7 சதவீதம் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | எச்சரிக்கை... இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்... சில ஆபத்தான பானங்கள்

பாராசிட்டமால் மாத்திரை பாதுகாப்பானதானா? (How safe is paracetamol?)

பராசிட்டமால் பொதுவாக லேசான காய்ச்சல், வலி ​​அல்லது தசைக்கூட்டு கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது. ஆனால் ஆய்வின் முடிவுகள், பாராசிட்டமாலின் நீண்டகால பயன்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

பாராசிட்டமால் மருந்தின் பாதுகாப்பு குறித்த நிபுணர்களின் கருத்து

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் வெய்யா ஜாங், பாராசிட்டமால் பாதுகாப்பான மருந்தாகக் கருதப்படுகிறது. பல சிகிச்சை வழிகாட்டுதல்களில் முதன்மை மருந்தாகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அதனை நீண்ட காலம் தொடர்ந்து உபயோகிப்பதும், அடிக்கடி பயன்படுத்துவதும் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | விந்தணுக்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களே உடனே செய்யவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News