‘ரஜினி-169’ படத்தின் டைட்டில் இதுவா?!

நெல்சன் இயக்கவுள்ள ரஜினியின் 169ஆவது படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 27, 2022, 04:56 PM IST
  • பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்தை இயக்கவுள்ளார் நெல்சன்
  • ரஜினியின் புதிய படம் குறித்து தகவல் கசிந்துள்ளது
  • ரஜினி 169 படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்
‘ரஜினி-169’ படத்தின் டைட்டில் இதுவா?! title=

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் வருகிற 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணையும் நெல்சன் ரஜினியின் 169ஆவது படத்தை இயக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் - விஜய்- ரஜினி என தலைமுறை இடைவெளி கொண்ட நடிகர்களின் படங்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் தமிழ் சினிமாவின் பலரது பார்வை தற்போது நெல்சனின் பக்கம் திரும்பியுள்ளது. பீஸ்ட் ரிலீசாகும் முன்பே ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளதை பலரும் ஆச்சர்யமாகவும் பார்த்து வருகின்றனர்.

நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத்தே இப்படத்துக்கும் இசையமைக்கவுள்ளார். ரஜினியின் இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்துக்கு ஆங்கிலப் பெயரில் டைட்டில் வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படத்துக்கு ‘டாக்டர்’, விஜய் நடித்த படத்துக்கு ‘பீஸ்ட்’ என இரு படங்களுக்கும் ஆங்கிலத்திலேயே டைட்டில் வைக்கப்பட்டது. அந்த அடிப்படையில்தான் இந்தப் படத்துக்கும் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்படவுள்ளதாம். ரஜினி படம் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாக வாய்ப்புள்ளதால் இந்தியா முழுக்க ஒரேவிதமான பெயரில் இருக்கவேண்டும் எனும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மிக விரைவில் படத்தின் டைட்டில் வெளியிடப்படும் எனும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ‘மங்காத்தா’வுல முதல்ல நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News