எனக்கு விருப்பமே இல்லை அனைத்துக்கும் அவர்தான் காரணம் - விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்

வேலையில்லா பட்டதாரி படத்தில் விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன் என இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 29, 2022, 06:00 PM IST
  • ஜூன் 9ஆம் தேதி நடக்கிறது நயன் - விக்னேஷ் ஷிவன் திருமணம்
  • வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் விக்னேஷ் சிவன்
 எனக்கு விருப்பமே இல்லை அனைத்துக்கும் அவர்தான் காரணம் - விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக் title=

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. அமலா பால், சமுத்திரகனி, சரண்யா உள்ளிட்டோ நடித்திருந்த இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

பொறியியல் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞராக தனுஷ் நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படத்தின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. 

விஐபி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடித்திருப்பார். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விக்னேஷ் சிவன், “வேலையில்லா பட்டதாரி படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பதாக இருந்தது. அவர் வராததால் என்னை தனுஷ் சார் நடிக்க வைத்தார். விருப்பம் இல்லாமல்தான் அந்தப் படத்தில் நடித்தேன் ” என்றார்.

மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!

விக்னேஷ் சிவன் சமீபத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருந்தார். படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அவர் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vignesh

இதற்கிடையே, ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் வினேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. நயனுடன் இணைந்து தொடர்ந்து பட தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்திவரும் விக்னேஷ் சிவன் படங்களை வெளீயிட்டும்வருகிறார்.

மேலும் படிக்க | என் பெயரில் மோசடி நடக்கிறது ஏமாறாதீர்கள் - குக் வித் கோமாளி புகழ்

அதுமட்டுமின்றி நயனுடன் ரியல் லைஃபில் ஜோடி சேர்ந்திருப்பதால் அவர் விரைவில் சினிமாவிலும் நடிக்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தது குறித்து விக்னேஷ் சிவன் அளித்திருக்கும் பதிலால், அவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்துவருகின்றனர்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News