ஓடிடியை கலக்க வருகிறது ‘உப்பு புளி காரம்’! எப்போது ரிலீஸ் தெரியுமா?

Uppu Puli Karam Series : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும், அதன் அடுத்த  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், 'உப்பு புளி காரம்'   

Written by - Yuvashree | Last Updated : Apr 14, 2024, 07:36 PM IST
  • டிஸ்னி ஹாட்ஸ்டாரில் புதிய தொடர்
  • போஸ்டர் வெளியாகியுள்ளது
  • இதில் பொன்வண்ணன் நடிக்கிறார்
ஓடிடியை கலக்க வருகிறது ‘உப்பு புளி காரம்’! எப்போது ரிலீஸ் தெரியுமா? title=

Uppu Puli Karam Series : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டுள்ளது.

“உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில்,  நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், அட்டகாசமான பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் “உப்பு புளி காரம்” சீரிஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப் பெரும் விருந்தாக அமையும்.

மேலும் படிக்க | ‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். இந்த சீரிஸுக்கு இசையமைப்பாளர் ஷேக் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், குறிப்பாக தற்காலத்திய இளைஞர்களிடமிருந்து அபரிமிதமான அன்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது. 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News