தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?

Ajith Support Vijay TVK Party : நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியதை தொடர்ந்து, அவர் அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல செய்திருக்கும் செயல் குறித்து ரசிகர்கள் தற்போது பேசி வருகின்றனர். 

Written by - Yuvashree | Last Updated : Oct 26, 2024, 06:12 PM IST
  • களைக்கட்டும் விஜய்யின் தவெக மாநாடு
  • அஜித் ஆதரவா?
  • முழு விவரத்தை இங்கு படிங்க..
தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா? title=

Ajith Support Vijay TVK Party : நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரும் பிளானுடன் இருந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். வரப்போகும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக போட்டியிட உள்ளதாக அறிவித்த நடிகர் விஜய், அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் முன்கூட்டியே இறங்கிவிட்டார். 

விஜய்யின், தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி சாலையில் பிரம்மாண்டமான அளவில் அக்டோபர் 27ஆம் தேதியான நாளை நடைபெற இருக்கிறது. பல லட்சம் பேர் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கான பாதுகாப்பு பணிகளும், வருவோருக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் இதில் என்ன பேச போகிறார்? அவரது அரசியல் கொள்கை என்ன? மக்களுக்கு எந்த வகையான அரசியல் வாக்குறுதிகளை கொடுக்க இருக்கிறார்? என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடையாக வருகிறது நாளைய மாநாடு. 

அஜித் செய்த செயல்! 

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய போது உதயநிதி ஸ்டாலின், சீமான் உட்பட பல அரசியல் பிரமுகர்களும், பல்வேறு சினிமா பிரபலங்களும் வரவேற்புகளும் வாழ்த்துக்களையும் அளித்தனர். நடிகர் அஜித் சினிமாவில் ஆக்டிவாக இருப்பதுடன் தனது பணிகளை நிறுத்திக் கொள்வார். அரசியலில் எப்போதும் கலந்து கொள்ளவே மாட்டார். ஆனால் அவர் தற்போது ஒரு விஷயத்தில் மௌனம் காத்திருப்பது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறி இருக்கிறது. 

2019 ஆம் ஆண்டு அஜித்தின் ரசிகர்கள் சிலர் பாஜக கட்சியில் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. இதைஅடுத்து அஜித்தும் கட்சியில் சேர இருப்பதாக பேசப்பட்டது. இந்த தகவல் வெளியான உடனேயே எதற்கும் வாய்ப்பு இருக்காது அஜித், தனது செய்தி தொடர்பாளர் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டாக, தேர்தலின் போது வாக்களிப்பதுடன் தன் கடமை நின்று விடுவதாக கூறினார். 

Ajth Kumar

மேலும்  படிக்க | விஜய் மாநாடுக்கு அஜித் ரசிகர்கள் செய்த தரமான செய்கை! வேற லெவல் சம்பவம்!

தற்போது விஜயின் தவெக மாநாடு நடைபெற இருக்கும் சமயத்தில் அஜித்தின் ரசிகர்கள் சிலர் இந்த கட்சியில் சேர்ந்து விட்டதாக தகவல்கள் பரவியது. ஆனால் இதை அஜித் மறுக்கவோ ஏற்கவோ இல்லை. இதுகுறித்து எந்த பத்திரிகை செய்திகளையும் வெளியிடவும் இல்லை. இவரது இந்த மௌனம், விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் பேசி வருகின்றனர். அது மட்டுமல்ல, தவெக மாநாடு நடக்கும் திடலில் அஜித்தின் ரசிகர்கள் விஜய்-அஜித் இருவருக்கும் கட்-அவுட் வைத்திருக்கின்றனர்.

விஜய்-அஜித் நட்பு!

நடிகர் விஜய்யையும் அஜித்தையும் இப்போதும் பலர் போட்டி நடிகர்களாக கருதி வருகின்றனர். இவர்கள் ஒரு காலத்தில் போட்டி பாேட்டு தங்களின் படங்களை ரிலீஸ் செய்தது உண்மை என்றாலும், அதன் பிறகு தனித்தனி வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டனர். உண்மையில், இருவரும் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை என்றாலும் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றன். நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ படத்தை வெங்கட் பிரபு இயக்கிய போது அவரிடம் பேசிய அஜித், “மங்காத்தா படத்தை விட பல மடங்கு இந்த படம் நல்லா வரணும்” என்று ஆர்டர் போட்டாராம். அதே போல, மாஸ்டர் படத்தை பார்த்த இவர், அதில் நடித்திருந்த அர்ஜுன் தாஸிடம் “கண்டிப்பா ஒரு படம் ஒன்னா பண்ணலாம்” என்றும் கூறியிருக்கிறார். விஜய்-அஜித்தின் ரசிகர்கள்தான் இன்னும் இணையதளத்தில் சண்டை போட்டு நேரத்தை வீணடித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News