விமர்சனத்துக்கு உள்ளான நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் புகைப்படம்

விமர்சனத்துக்கு உள்ளான பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் புகைப்படம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 18, 2018, 09:24 PM IST
விமர்சனத்துக்கு உள்ளான நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் புகைப்படம் title=

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா 2010 ஆம் ஆண்டு "தபங்" பட மூலம் சல்மான்கானுக்கு ஜோடியாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இவரது தந்தையும் ஒரு நடிகர் ஆவார். தனது முதல் படத்திலேயே சோனாக்ஷி சின்ஹா சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது பெற்றார். 

பின்னர் 2012 ஆம் ஆண்டு தமிழில் நல்ல வரவேற்ப்பை பெற்ற "சிறுத்தை" படத்தின் இந்தி ரீ-மேக்கான "ரவுடி ராதோர்" படத்தில் நடித்தார். இந்த படத்தை டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா இயக்கினர். அதேபோல ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கிய "அகிலா" மற்றும் "ஹாலிடே" ஆகிய இரண்டு படங்களிலும் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடித்தார். 

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிபில் வெளியான "லிங்கா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதுவரை கிட்டத்தட்ட சுமார் 25-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் "கலங்க" (Kalank) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோனாக்‌ஷி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற புடவை அணிந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

புகைப்படம்:- 

 

 

 

Trending News