KGF அத்தியாயம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு; மாஸ் காட்டும் யஷ்

இன்றுடன் கேஜிஎப் திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2019, 03:56 PM IST
KGF அத்தியாயம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு; மாஸ் காட்டும் யஷ் title=

புது டெல்லி: இன்றுடன் கேஜிஎப் திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. 

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்கும் KGF படத்தின் இரண்டாவது பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் விண்மீன் யஷ் நடிப்பில் KGF படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. KGF முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னட திரைப்படம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.

கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை KGF பெற்றுள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார். கோலார் தங்க சுரங்கத்தில் பல காலமாக இருந்து வந்த அடிமை முறையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது. 

 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து KGF இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கதாநாயகன் யஷ், தொழிலாளர்களுடன் சேர்ந்து கல்தூண் ஒன்றை கட்டி இழுத்து வருவது போல் இடம் பெற்றுள்ளது. கேஜிஎப் திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அதீரா என்னும் பகைவன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டு, சஞ்சய் தத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News