கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம்?

'தேவராட்டம்' படத்தில் ஜோடியாக நடித்த கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 10, 2022, 10:36 AM IST
  • மணிரத்னம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த 'கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் கெளதம் .
  • இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம்?  title=

வாரிசு நடிகரான கெளதம் கார்த்திக் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த 'கடல்' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.  இதனைத்தொடர்ந்து  என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், ஹரஹர மஹாதேவகி, IAMK, இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்தார்.  இவருக்கென்று தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க ரசிகர் பட்டாளம் உள்ளது.

gauthamkarthik

மேலும் படிக்க | பாடகியாக அவதாரமெடுத்த இயக்குனர் ஷங்கரின் மகள்!

இந்நிலையில் கெளதம் கார்த்திக் அவருடன் இணைந்து நடித்த ஒரு நடிகையை திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.  'தேவராட்டம்' படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கும் மஞ்சிமாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.  இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாரி இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.  இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இவர்கள் இருவரும் தங்களது காதலை வெளியுலகிற்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை.

majima

காதலர் தினத்தையொட்டி வெளியாகிய இந்த செய்தி கெளதம் கார்த்திக்-மஞ்சிமா ரசிகர்ககளிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.  மேலும் ஏப்ரல் மாதத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது, இருப்பினும் இதுகுறித்த உண்மையான தகவலை கெளதம் கார்த்திக்-மஞ்சிமா ஜோடி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.  

Devarattam Pasappukalli Song Video Gautham Karthik Manjima Mohan Soori |  Galatta

தற்போது கெளதம் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் இவர்கள் திருமணம் குறித்த தெளிவான தகவல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். தற்போது கெளதம் கைவசம் 'பத்து தல', 'செல்லப்பிள்ளை', 'யுத்த சத்தம்' போன்ற படங்கள் உள்ளன, அதேபோல மஞ்சிமாவும் தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து 'FIR' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் படிக்க | FIR படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News