சனி வக்ர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு அட்டகாசமான நன்மைகள், அமோகமான வாழ்க்கை

Shani Vakri: சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 5 ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 16, 2023, 01:04 PM IST
  • வக்ர சனி மேஷ ராசிக்காரர்களுக்கு வலுவான நிதி ஆதாயங்களைத் தருவார்.
  • இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும்.
  • இந்த காலத்தில் சேமிப்பும் அதிகமாக இருக்கும்.
சனி வக்ர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு அட்டகாசமான நன்மைகள், அமோகமான வாழ்க்கை title=

சனியின் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களை அளிக்கிறார். ஒரு மனிதன் நல்ல செயல்களை செய்தால், தனக்கான கர்ம வினைகளை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் முக்கியமாக கிரகமாக உள்ளார். மேலும் இவர் மிக மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். 

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜனவரி 17, 2023 அன்று, தனது ராசியை மாற்றி சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். இதற்குப் பிறகு, இப்போது நாளை, அதாவது ஜூன் 17, 2023 அன்று, அவர் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். சனி 4 நவம்பர் 2023 வரை வக்ர நிலையில் இருப்பார். சனியின் வக்ர பெயர்ச்சி கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்கும். 

கேந்திர திரிகோண ராஜயோகம்

சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 5 ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும். இவர்களின் வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும். நினைத்த வேலைகள் அனைத்தும் இந்த காலத்தில் வெற்றிகரமாக நடந்து முடியும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

வக்ர சனியால் அட்டகாசமான வாழ்வை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்:

மேஷ ராசி:

வக்ர சனி மேஷ ராசிக்காரர்களுக்கு வலுவான நிதி ஆதாயங்களைத் தருவார். இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் சேமிப்பும் அதிகமாக இருக்கும். இப்போது முதலீடு செய்ய ஏற்ற காலமாக இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களை அளிக்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களின் நிதிக் கவலைகள் அனைத்தும் நீங்கும். இந்த நேரம் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரும்.

ரிஷப ராசி

சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களின் தொழிலில் பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வேலை உங்களுக்கு இப்போது கிடைக்கும். இதில் நல்ல சம்பளமும் கிடைக்கும். ஏற்கனவே  நல்ல வேலையில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பதவி, கௌரவம் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | இன்னும் 24 மணி நேரம்.. வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு பொற்காலம், முழு ராசிபலன் இதோ

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்கள் சனியின் அருளால் பல நன்மைகளைப் பெறுவார்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு மிக அதிகமாக இருக்கும். பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். உங்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மகிழ்ச்சியான காலத்தை கொண்டு வரவுள்ளது என்றே கூறலாம். 

சிம்ம ராசி

சனியின் வக்ர பெயர்ச்சி, சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதிப் பலன்களை வழங்கும். இந்த காலத்தில் உங்களிடம் உள்ள கூடுதல் தொகையை நீங்கள் முதலீடு செய்ய முடிந்தால், நீங்கள் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒப்பந்தம் இப்போது உறுதி செய்யப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். இந்த காலத்தில் சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மகர ராசி

சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை பலப்படுத்தும். பல வழிகளில் பண வரவு இருக்கும். மகர ராசிக்காரர்கள் இப்போது பெரிய அளவில் சேமிக்க முடியும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். இந்த காலத்தில் உங்களுக்கு அனுகூலமான பல நல்ல விஷயங்கள் நடக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு சாண்டள ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு நிறைய ஆபத்துகள் ஏற்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News