செவ்வாய் கடகத்தில் நுழையும் போது சனி - செவ்வாய் நிலையினால் ஏற்படும் ஷடாஷ்டக யோகத்தால் சில ராசிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
செவ்வாய்ப் பெயர்ச்சி 2023: ஜூன் 30-ம் தேதி கடக ராசியில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. செவ்வாய் கடகத்தில் நுழையும் போதே சனியின் நிலை காரணமாக ஷடாஷ்டக யோகம் உருவாகும். ஜோதிடத்தில், ஷடாஷ்டக் யோகம் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இதிலும் செவ்வாய் மற்றும் சனியின் ஷடாஷ்டக யோகம் மிகுந்த அசுப பலனை தருகிறது.
ஜூன் மாத இறுதியில் உருவாகும் இந்த கிரக யோகம் அனைவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிகல் மிகவும் பாதிக்கப்படுவர். செவ்வாய் நெருப்பு உறுப்பு கிரகமாக இருக்கும் நிலையில் நீர் உறுப்பு ராசியில் இருக்கும். மறுபுறம், சனி அதன் காற்று ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், சனி செவ்வாய் யோகத்தின் தாக்கம் உலகம் முழுவதும் பொருளாதார விஷயங்களில் காணப்படும். உலகில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும். சனி, செவ்வாயின் அசுப யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அசுப சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் கடகத்தில் நுழைவதால் சனியுடன் உண்டாகும் கிரக நிலையினால் அசுப ஷடாஷ்டக யோகம் உண்டாகும். அத்தகைய சூழ்நிலையில், சனி செவ்வாய் உங்களுக்கு மன மற்றும் நிதி சிக்கல்களை அதிகரிக்கும். நீங்கள் சில தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். காயம் மற்றும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆவணங்கள் இல்லாமல் யாரிடமும் பணப் பரிவர்த்தனை செய்யாதீர்கள். உங்கள் செலவுகள் வரம்பை மீறலாம். பேச்சில் கவனம் தேவை. கடன் வாங்க நிலையும் ஏற்படலாம். உடல் வலியுடன், மன உளைச்சலையும் காணலாம். அரசாங்க விஷயங்கள் மற்றும் விதிகளுக்கு எதிராக செயல்படும் தவறை செய்யாதீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியுடன் ஷடாஷ்டக யோகம் ஏற்படுவது சுபமாக, பலனாக கருதப்படுவதில்லை. கடக ராசியில் செவ்வாய் நுழையும் போது, உங்கள் ராசியின் அதிபதியான சூரியன், சுப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு பண வரவுக்கு உதவியாக இருக்கும். ஆனால் சனியும் செவ்வாயும் உங்கள் சேமிப்பையும் சம்பாதிப்பையும் எவ்வாறு விழுங்குவார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது. குடும்ப வாழ்க்கையில், மூதாதையர் சொத்து சம்பந்தமாக மனக்கசப்பும், வாக்குவாதமும் ஏற்படலாம். தந்தையின் உடல்நிலை குறைவினால் கவலை அடைவீர்கள். இந்த நேரத்தில், பயணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
செவ்வாய் மற்றும் சனியின் பாதக யோகம் உங்களுக்கு கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் உறவினர்களால் மன அழுத்தம் ஏற்படலாம். இந்த நேரத்தில் நிதி பரிவர்த்தனை செய்வதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஏதாவது புதிய தொழில் அல்லது முதலீடு தொடங்க நினைத்தால், இந்த நேரம் ஏற்றது அல்ல. செவ்வாய் மற்றும் சனியின் அசுப யோகத்தால் தொண்டை மற்றும் வாய் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் கிரக நிலையும் சாதகமற்ற நிலையில் உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
செவ்வாய் மற்றும் சனியின் ஷடாஷ்டக யோகமும் கும்ப ராசிக்காரர்களுக்கு வேதனை தரும். இந்த நேரத்தில், ராசியின் அதிபதியான சனி வக்ர நிலையில் சஞ்சரிப்பார் மற்றும் செவ்வாய் உங்கள் வாழ்க்கையில் பல வழிகளில் தடைகளை ஏற்படுத்துவார். இந்த நேரத்தில் உங்கள் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலாம். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் தொடரும். தொழில் வியாபாரத்தில் முரண்பட்ட சூழ்நிலையை சந்திக்க வேண்டி வரும். இந்த நாட்களில் உங்கள் எதிரிகள் வலுவாக இருப்பார்கள். வேலையும் மீண்டும் மீண்டும் தடைபடும். அரசுத் துறை சம்பந்தமான வேலைகள் ஏதும் இருந்தால், நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். நிதி விஷயங்களில் நீங்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.