இன்றைய ராசிபலன்: இந்த ராசிகளுக்கு இன்று நிதி ஆதாயம் பெருகும்

தினசரி ராசிபலன்: ஜூன் 16, 2023க்கான ஜோதிடக் கணிப்பு: சாதாரண குடும்பம் மற்றும் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கும் தேவையை விட அதிகமாக இருந்தாலும் நிதி அழுத்தங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 16, 2023, 05:50 AM IST
  • கணவன் மனைவி உறவு மேம்படும்.
  • உத்தியோகத்தில் மன நிம்மதி கிடைக்கும்.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும்.
இன்றைய ராசிபலன்: இந்த ராசிகளுக்கு இன்று நிதி ஆதாயம் பெருகும் title=

அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

16-06-2023, ஆனி மாதம் 01, வெள்ளிக் கிழமை, சோபகிருது வருடம், திதி: திரியோதசி 09.33, கார்த்திகை நட்சத்திரம் 25.50, சித்த 25.50 மேல் மரணயோகம்.

இராகு காலம் - 10:30 - 12:00.
எம கண்டம் - 03:00 - 04:30.
நல்ல நேரம் காலை 09:30 - 10:30 மாலை 04:30 - 05:30.
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி 
குளிகன் - காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

மேலும் படிக்க | ஜூன் 17, சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள், உங்க ராசி என்ன?

இன்றைய ராசிபலன் - 16.06.2023

மேஷம்: உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு. சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். உங்களுடைய பற்றாக்குறையை திறம்பட சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

ரிஷபம்: இன்று சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. வங்கித்தொழில் உணவு தொழில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். 

மிதுனம்: நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். இருப்பினும் இன்று மாலை குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் தொடர்பான செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

கடகம்: மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். உத்தியோகத்தில் மன நிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவி உறவு நிலை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் அன்னியோன்னியம் நன்றாக இருந்து வரும்.

சிம்மம்: கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவுகள் சற்று அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக வேண்டிவரும். எதிர்பார்த்த பணம் வரும். புது தொழில் முயற்சிகள் வெற்றி தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும்.

கன்னி: இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு உறவினர்களால் செலவினங்கள் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் அமையும் நாளாக இன்றைய நாள் இருக்கிறது. கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும்.

துலாம்: ஆராய்ச்சி படிப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் இன்று துவக்காமல் இருப்பது நல்லது. உங்களது தீவிர ஈடுபாடு பணம் மற்றும் மரியாதையை உங்களுக்கு பெற்று தரும். அதிகரிக்கும் கடன் சிரமத்தை ஏற்படுத்தும். 

விருச்சிகம்: கல்வியை முடித்து வேலை வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். வேலையில் இடமாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் அவை தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம்.

தனுசு: வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர்கல்வியில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். 

மகரம்: மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்துவரும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலை நிலவி வரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைய கூடிய நல்ல நாளாகும்.

கும்பம்: இன்று உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

மீனம்: சொத்து வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயத்தையும் உணவு தொழில் சேவை தொழில் பெண்கள் தொடர்பான பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயத்தை தரக்கூடிய தினமாக இன்றைய நாள் அமையும்.

மேலும் படிக்க | 141 நாட்களுக்குப் பிறகு, இந்த ராசிகளுக்கு கஷ்டம், நஷ்டத்தை தருவார் சனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News