இவர்தான் விஜய்-ன் 62வது படத்தின் இசையமைப்பாளர்!

மெர்சல்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். 

Updated: Jan 2, 2018, 12:36 PM IST
இவர்தான் விஜய்-ன் 62வது படத்தின் இசையமைப்பாளர்!

மெர்சல்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். 

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் நாயகி, வில்லன் மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். 

விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளராக விஜய்யின் 62-வது படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.