இந்தியில் ரீமேக்காகும் தளபதி விஜய்-ன் தெறி.... இவர்தானா ஹீரோ....?

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் பிளாக்பஸ்டர் ஹிட்டான தெறி படம், இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

Last Updated : Apr 26, 2020, 01:01 PM IST
இந்தியில் ரீமேக்காகும் தளபதி விஜய்-ன் தெறி.... இவர்தானா ஹீரோ....? title=

அட்லீ இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்த படம் ‘தெறி’. இந்த படம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியானது. இந்த படம் மிகவும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்த படம் 175 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. 

இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர். மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, அழகம் பெருமாள் என ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படத்துக்கு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இந்நிலையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Trending News