'FIR' படத்தை 7 கோடிக்கு வாங்கிய அமேசான் பிரைம்!

விஷ்ணு விஷால் நடிப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள 'FIR' படத்தின் OTT வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ 7 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 06:21 PM IST
  • கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்தது.
  • இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் போலீசாகவும், விஷ்ணு விஷால் தேடப்படும் குற்றவாளியாகவும் நடித்துள்ளார்.
'FIR' படத்தை 7 கோடிக்கு வாங்கிய அமேசான் பிரைம்! title=

கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களுள் ஒருவரான மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'FIR'.  இப்படத்தை விஷ்ணு விஷால் தனது விவி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.  ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், பார்வதி, கௌரவ் நாராயணன், பிரசாந்த் ரங்கசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

vishnu

ALSO READ | ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த RRR!

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது.  இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.  இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் போலீசாகவும், விஷ்ணு விஷால் தேடப்படும் குற்றவாளியாகவும் நடித்துள்ளார்.

fir

கொரோனா நோய் பரவலால் திரையரங்குகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இத்திரைப்படம் நேரடியாக OTTல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.  ஆனால் இந்த தகவல் தவறானது என்றும் திரையரங்குகளில் படத்தை வெளியிடவே படக்குழு முயற்சி செய்து வருவதாகவும் படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் இப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  மேலும் இப்படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் 7 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதனை உறுதி செய்யும் விதமாக விஸ்ணு விஷால் ட்வீட் ஒன்று செய்துள்ளார்.

 

ALSO READ | மிரட்டலாக வெளியாகியுள்ள 'மகான்' படத்தின் டீசர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News