நான் பச்சைத் தமிழன்: ரஜினிகாந்த் பேச்சு

Last Updated : May 19, 2017, 09:35 AM IST
நான் பச்சைத் தமிழன்: ரஜினிகாந்த் பேச்சு title=

கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடைசி நாளான இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கிறார். 

ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், முதல் நாளன்று நான் பேசிய பேச்சு இவ்வளவு சர்ச்சைக்குரியதாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார். 

தான் பிறந்தது கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதால் தான் பச்சைத் தமிழன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். 

கடைசி நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் தான் தமிழனா என்று சமூக வலைதளங்கள் மற்றும் டுவிட்டரில் வெளியாகும் தரமற்ற விமர்சனங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். R

இதுகுறித்து இன்று ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசுகையில்:-

எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மாராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்". 

"என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும், இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும்".

திருமாவளவன், ஸ்டாலின், அன்புமணி, சீமான் உள்ளிட்ட நல்ல தலைவர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், ஜனநாயகம் சரியில்லை. அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. அனைவருக்கும் வேலை உள்ளது. ஊருக்கு சென்று தொடர்ந்து வேலையை பாருங்கள், போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்.

என்றார் ரஜினிகாந்த்.

Trending News