"இந்திரஜித்" இப்போது காமிக் புத்தக வடிவில்!

ஆக்ஷன் அட்வெஞ்சர் தோனியில் உருவான இப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Last Updated : Nov 28, 2017, 04:07 PM IST
"இந்திரஜித்" இப்போது காமிக் புத்தக வடிவில்! title=

கெளதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் "இந்திரஜித்". இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தினை மையமாக கொண்டு புதிய காமிக் புத்தகமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

கெளதம் கார்த்திக் மற்றும் சோனாரிகா படோரியா, அஷ்ரிதா ஷெட்டி நடித்துள்ள இத்திரைப்படத்தினை கலா பிரபு இயக்கியிருந்தார். 

சுதன்சு பாண்டே, பிரதாப் போத்தன், ராஜ்வீர் சிங், சச்சின் கடேகர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆக்ஷன் அட்வெஞ்சர் தோனியில் உருவான இப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்று உள்ள கெளதம் கார்த்திக் கதாபாத்திரத்தினை மைய்யப்படுத்தி காமிக் புத்தகம் ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த காமிக் புத்தகத்தை பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் பல குழந்தைகளின் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்

Trending News