‘மாயவா மாயவா’... வெளியானது இரவின் நிழல் சிங்கிள் பாடல்

பார்த்திபன் இயக்கியிருக்கும் இரவின் நிழல் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 1, 2022, 09:58 PM IST
  • இரவின் நிழல் சிங்கிள் வெளியீடு
  • மாயவா மாயவா பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார்
  • சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் படம்
‘மாயவா மாயவா’... வெளியானது இரவின் நிழல் சிங்கிள் பாடல் title=

ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'. ஒரே ஷாட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அவரே நடித்தும் இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இதன் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு இரவின் நிழல் படத்தை ஒரு ஸ்பெஷல் ஷோவாக பார்த்திபன் அவருடைய நண்பர்களுக்கு போட்டு காட்டினார். படத்தை பார்த்த அனைவரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

Rahman

இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியானது. மாயவா மாயவா என்று தொடங்கும் பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். த்வானி நிறுவனம் சார்பில் இப்பாடல் வெளியிடப்பட்டது.

 

இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அவரது தந்தை, தாய் உருவம் பதித்த நினைவுப் பரிசை பார்த்திபன் வழங்கினார். மேலும், இவ்விழாவில் இயக்குநர்கள் சசி, எழில், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | அஜித் - விக்னேஷ் சிவன் படத்தில் விஜய்சேதுபதி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News