ரூ.400 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.. அதுவும் 6 நாளில்

Jailer Box Office Collection: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டுமே 52 கோடி ருபாய் வசூலித்துள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 16, 2023, 10:44 AM IST
  • விக்ரம் சாதனையை முறியடித்த ஜெயிலர்.
  • ரூ.400 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.
  • ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ரூ.400 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.. அதுவும் 6 நாளில் title=

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் படத்தறிக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்துள்ளனர். இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். தற்போது 'ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் ஜெயிலர்: 
ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என அன்புடன் அழைக்கப்படுபவர், ரஜினிகாந்த். இவர் நடித்த படங்கள் சில கடந்த 5 ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. கடைசியாக நடித்த அண்ணாத்த படமும் அதற்கு முன்னதாக நடித்திருந்த தர்பார், பேட்ட, 2.0 போன்ற படங்களும் வசூலில் குறை வைக்கவில்லை என்றாலும், சினிமா ரசிகர்களை பெரிதும் ஈர்க்காமல் போனது. இதையடுத்து நடிகர் ரஜினியின் கம்-பேக்கிற்காக கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது. 

குடும்ப கதைகளில் நடித்துக்காெண்டிருந்த ரஜினியை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஆக்ஷன் கதையில் நடிக்க வைத்துள்ளார். அதன்படி இந்த படம், கடந்த 10 ஆம் தேதி வெளியாதை அடுத்து நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினிக்கு ஏற்ற மாஸான காட்சிகள், புதிய பரிமானத்தில் அவருடைய காமெடி என ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் இந்த படத்தில் நிறைந்துள்ளது. இதனால், ரசிகர்கள் பலர் ஜெயிலர் படத்தை பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | ஒரு வழியா வெளியான அப்டேட்… அஜித்தின் விடாமுயற்சி குறித்து சூப்பர் தகவல்

ஜெயிலர் படத்தில் நடித்த பிரபலங்கள்..
ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினியை தவிர நடித்திருந்த பிற முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே கேமியோ ரோலில் வந்திருந்தனர். மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகை தமன்னா, இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் வசந்த், விநாயகம், விடிவி கணேஷ், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி ரஜினிகாந்திற்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். 

ஜெயிலர் படத்தின் ஆறு நாள் வசூல் நிலவரம்..
இந்த நிலையில் இந்த படம் வெளியான ஆறு நாட்களில் உலகம் முழுவதும் 400 ரூபாய் கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் இந்தப் படம் ரூபாய் 200 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. சுதந்திர தினமான நேற்று ‘ஜெயிலர்’ படம் நாடு முழுவதும் ரூபாய் 33 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் இப்படம் இதுவரை ரூபாய் 30 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் இந்த படம் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 மேலும் படிக்க | ஜெயிலர் படம் ஓடிடியில் ரிலீஸ்..! எந்த தளத்தில் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News