நடிகை கங்கணா ரணாவத்துக்கு கொரோனா தொற்று: வைரசை அழிப்பேன் என்று உறுதி

பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் கங்கணா தெரியப்படுத்தினார். 

Written by - ZEE Bureau | Last Updated : May 8, 2021, 11:56 AM IST
  • நடிகை கங்கணா ரணாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
  • இன்ஸ்ட்கிராம் பதிவு மூலம் அவர் இந்த செய்தியை அளித்தார்.
நடிகை கங்கணா ரணாவத்துக்கு கொரோனா தொற்று: வைரசை அழிப்பேன் என்று உறுதி

புதுடெல்லி: கொரோனா தொற்று நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பாகுபாடில்லாமல் அனைவரையும் இந்த தொற்று தன் பிடியில் சிக்கவைத்துக்கொண்டு உள்ளது.

பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் கங்கணா தெரியப்படுத்தினார். தனக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தான் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் அவர் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் ஒரு சிறிய காய்ச்சல்தான் என கூறியுள்ள கங்கணா, இதை விரைவில் அழிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 

கங்கணாவுக்கு உறுதியானது கோவிட்-19 தொற்றுநோய் 

கங்கணா தான் தியானம் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த படத்துடன், "கடந்த சில நாட்களாக எனக்கு கண்களில் எரிச்சல் இருந்தது, சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தது. நான் ஹிமாச்சல் செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தென். அதனால் நேற்று கோவிட் பரிசோதனை செய்துகொண்டேன். நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது இன்று வந்த பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது." என்று எழுதியுள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

ALSO READ: இயக்குநர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று!

கோவிட் ஒரு சிறிய காய்ச்சல் போன்றதுதான் என வர்ணித்தார் கங்கணா 

கங்கணா மேலும் தனது பதிவில், "நான் என்னைத் தனிமைப்படுத்திக் (Quarantine) கொண்டுள்ளேன். இந்த வைரஸ் என் உடலில் இருந்ததை நான் உணரவில்லை. இப்போது எனக்கு அது தெரிந்துவிட்டதால், அதை அழிக்காமல் விடமாட்டேன். உங்களை மீறி எதையும் அதிகமாக விடாதீர்கள். நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்த்து பயந்தால், அந்த விஷயம் இன்னும் உங்களை அச்சுறுத்தும். இந்த கோவிட்-19 (COVID-19) நோய்த்தொற்றை நாம் அழிக்கலாம். இது ஒரு சிறிய காய்ச்சல்தான். இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை." என்றும் மேலும் எழுதியுள்ளார். 

கங்கணாவின் ட்விட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டது

கங்கணா மேலும், "இப்போது இந்த வைரஸ் மக்களை அச்சுறுத்துகிறது.. ஹர் ஹர் மகாதேவ்!!" என்று எழுதியுள்ளார். 
சமீபத்தில் கங்கணாவின் ட்விட்டர் கணக்கு அவரது ஆட்சேபனைக்குரிய அறிக்கைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கங்கணா தனது ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார். மேற்கு வங்காளத்தில் மக்களைத் தூண்டியதாக அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது,

ALSO READ: கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் சோனு சூத்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News