புஷ்பா vs கே.ஜி.எப் 2? ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா?

புஷ்பா மற்றும் கே.ஜி.எப் 2 ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா? பல காரணங்களால் இந்த இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன. 

Written by - ZEE Bureau | Last Updated : Aug 13, 2021, 04:50 PM IST
புஷ்பா vs கே.ஜி.எப் 2? ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா?

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தென்னிந்திய படங்களான அல்லு அர்ஜுனின் புஷ்பா படமும், யஷ்-இன்  கேஜிஎப் 2 படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது. 

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரிலீஸ் செய்யப்படாத படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது.  குறிப்பாக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் படங்கள் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளன.  

2018 ஆம் ஆண்டு பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற கன்னடப் படமான கே.ஜி.எப் (KGF) படத்தின் இரண்டாம் பாகத்தை இந்த வருடம் ஜூலை 16 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது.  கொரோனா பரவலின் காரணமாக தற்போது தேதி குறிப்பிடாமல் இது ஒத்திவைக்கபட்டிள்ளது. 

ALSO READ: Netrikann Release: ஓடிடி-யில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண்!

தெலுங்கில் பான் இந்தியா படமாக உருவாகிக்கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா (Pushpa) திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  இன்று புஷ்பா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.  

தற்போது கேஜிஎப் 2 படத்திற்கு சரியான ரிலீஸ் தேதி அமையாமல் இருப்பதால் கேஜிஎப் 1 ரிலீஸ் ஆன அதே தேதியில் கேஜிஎப் 2 வையும் வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இரண்டு பெரிய படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் செய்யப்பட்டால் தியேட்டர் கிடைப்பதில் அதிக சிரமம் ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து குரல்கள் எழத் தொடங்கி உள்ளன.  கேஜிஎப் 2 படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம்  ஒன்று மிகப் பெரிய விலைக்கு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அதற்கு படக்குழு மறுத்து விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ALSO READ: Pushpa Update: புஷ்பா ரிலீஸ் தேதி அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News