Pushpa Update: புஷ்பா ரிலீஸ் தேதி அறிவிப்பு

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியானது.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 3, 2021, 01:46 PM IST
Pushpa Update: புஷ்பா ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. 

சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் (Allu Arjun) கூட்டணியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக புஷ்பா வெளியாக இருக்கிறது.

ALSO READ | Pushpa Update: புஷ்பா படத்தின் முக்கிய அப்டேட் இதோ

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதற்கிடையில் புஷ்பா படத்தின் முதல் பாகம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இதன் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

முன்னதாக புஷ்பா படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | அல்லு அர்ஜுனின் அடுத்த படம்..வெளியானது FIRST LOOK....

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News