Thalapathy 70 : தளபதி 70 கன்ஃபாரம்?! இயக்குநர் இவர்தான்..வைரலாகும் சூப்பர் நியூஸ்!

Latest News Thalapathy 70 : நடிகர் விஜய், விரைவில் அரசியலில் களம் காண இருக்கிறார். இந்த நிலையில் அவர் கடைசியாக தளபதி 69 படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 30, 2024, 12:28 PM IST
  • தளபதி 70 கன்ஃபார்ம்?
  • இயக்குவது யார்?
  • விஜய்யின் அரசியல் என்னாகும்?
Thalapathy 70 : தளபதி 70 கன்ஃபாரம்?! இயக்குநர் இவர்தான்..வைரலாகும் சூப்பர் நியூஸ்! title=

Latest News Thalapathy 70 : நடிகர் விஜய், விரைவில் அரசியலில் களம் காண இருக்கிறார். இந்த நிலையில் அவர் கடைசியாக தளபதி 69 படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 70 படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அரசியலில் முழு நேரமாக இறங்கும் விஜய்..

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகராக விளங்கி வருபவர், விஜய். இவர், கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது, தான் தற்போது கமிட்டாகியிருக்கும் படங்களில் நடித்து முடித்து விட்டு, முழு நேரமாக அரசியலில் இறங்க இருப்பதாகவும் கூறினார். இதைக்கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். சினிமாவில், டாப் இடத்தில் இருக்கும் பாேது விலகுவது மிகவும் அரிதாகும். அப்படி, நடிகர் எம்.ஜி.ஆர்தான் செய்தார். தற்போது விஜய்யும் அதே வழியை பின்பற்றி வருகிறார்.

காேட் படத்திற்கு பிறகு தளபதி 69:

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்திருக்கும் தி கோட் (The Greatest Of All Time) திரைப்படம் ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. இதில், நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படம், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இது விஜய்யின் கடைசி சினிமா பயணம் என்பதாலும், விஜய்க்கு இது புதுவிதமான கதைக்களம் என்பதாலும் இதன் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

தி கோட் படத்தை அடுத்து, நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஹெச்.வினோத், இது 200% தளபதியின் படமாக இருக்கும் என்று கூறினார். இப்படம், பொலிட்டிக்கள் த்ரில்லரா? என்ற கேள்வியும் முன்னர் எழுந்தது. இது குறித்து பேசிய ஹெச்.வினோத், இப்படம் பக்கா கமர்ஷியலான படமாக இருக்கும் என்றும் கூறினார். இதையடுத்து, இதன் மீதும் விஜய் ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. 

மேலும் படிக்க | விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!

தளபதி 70? 

விஜய், தனது 69வது படத்துடன் சினிமா பயணத்தை நிறுத்திக்கொள்வதாக கூறிய பின், பலர் அதற்கு பாராட்டு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் சோகமடைந்தனர். இதனால், “ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து கொடுத்து விட்டு போகலாமே..” என்று சிலர் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஏற்ற ஒரு தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய், 70வது படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இந்த படத்திற்காக 15 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்கள் கால்ஷீட் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை யார் இயக்க இருக்கிறார் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது குறித்து பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

இவர்தான் இயக்குநரா?

இயக்கியதே 5 படங்கள்தான் என்றாலும் அதில் விஜய்யை வைத்து மட்டும் 3 படங்களை இயக்கியவர், அட்லீ. இவர்தான், தற்போது தளபதி 70 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜவான் படத்திற்கு பிறகு பான்-இந்திய இயக்குநராக மாறிவிட்ட இவர், விஜய்யை வைத்தும், இன்னொரு பிரபல ஹீரோவை வைத்தும் ஒரு படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 

Thalapathy 70

வாய்ப்பிருக்கா? 

தளபதி 70 படம் குறித்து இப்பாேது வரை எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் இல்லை. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜய், 2025ஆம் ஆண்டு மாநாடு ஒன்றை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர் கிட்டத்தட்ட 1 ஆண்டு முழுமையாக சினிமாவை விட்டு விலகுவதற்கு எடுத்துக்கொள்வார் என பலர் கருத்துகளை தெரிவிக்கின்றனர். இனி முடிவெடுப்பது, விஜய்யின் கைகளில்தான் இருக்கிறது. 

மேலும் படிக்க | விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் பிரபல இயக்குநர் யார் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News