குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா! வைரலாகும் க்யூட் போட்டோஸ்..

Latest News Actress Rambha Vijay Photos : தமிழ் திரையுலகின் முன்னாள் நடிகையான ரம்பா, தனது குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யை சந்தித்திருக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Jul 17, 2024, 02:48 PM IST
  • விஜய்-ரம்பா சந்திப்பு
  • மீண்டும் ரீ-யூனியனா?
  • ரம்பா குடும்பத்தினருடன் விஜய்!
குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா! வைரலாகும் க்யூட் போட்டோஸ்.. title=

Latest News Actress Rambha Vijay Photos : தமிழ் சினிமாவின் டாப் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யை, முன்னாள் நடிகை ரம்பா நேரில் சந்தித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய்யை சந்தித்த ரம்பா:

நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா, கையோடு இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rambha (@rambhaindran_)

பல ஆண்டுகளுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட் என்றும் கூறியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய்-ரம்பா இணைந்து நடித்த படங்கள்:

நடிகர் விஜய், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் கதாநாயகனாக வலம் வருகிறார். இவர், தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்த போது அவருடன் சேர்ந்து நடித்த நாயகி, ரம்பா. இவர்கள் முதன் முதலாக 1995ஆம் ஆண்டில் வெளியான ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். தேவையானியும் இப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் மின்சார கண்ணா படத்தில் நடித்தனர். ஆனால், இதில் ரம்பா விஜய்க்கு ஜோடி இல்லை. தொடர்ந்து என்றென்றும் காதல் படத்திலும் இணைந்து நடித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற்றது. 

விஜய்-ரம்பாவின் கூட்டணியில் உருவான படங்கள் ஹிட் அடிக்க படத்தின் கதை காரணம் என்பதை தாண்டி இவர்களின் கெமிஸ்ட்ரியும் இதற்கு முதல் காரணமாக அமைந்தது. இதையடுத்து, இவர்கள் 90களுக்கு பிறகு பெரிதாக வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. சொல்லப்போனால், 2000 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மட்டுமன்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் கூட நடிகை ரம்பா குறைவான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட பிறகு மொத்தமாக திரையுலகில் இருந்தே விலகினார். இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர், கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு குடி பெயர்ந்தார். இவருக்கு, தற்போது இரு மகள்கள் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | சினிமாவிற்குள் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ரம்பா! எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

விஜய்யுடன் ரீ-யூனியன்?

நடிகர் விஜய்க்கு, கடந்த இரண்டு படங்களில் தொடர்ந்து ரீ-யூனியன் கூட்டணிதான் அமைந்து வருகிறது. லியோ படத்தில் 15 வருடங்களுக்கு பிறகு த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், அதைத்தொடர்ந்து GOAT படத்திலும் கமிட் ஆனார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சினேகா நடித்திருக்கிறார். இவர்கள் வசீகரா படத்திற்கு பிறகு இதில் ஒன்று சேர்ந்து நடித்தனர். அதே போல, தன்னுடன் பல வருடங்களுக்கு முன்னர் சேர்ந்து நடித்த ரம்பாவையும் மீட் செய்திருக்கிறார். இதையடுத்து, “இவர்கள் ஒன்றினைந்து ஒரு படத்தில் நடித்தால் நன்றாக இருக்குமே” என்று ரசிகர்கள் கருத்துகளை தங்களுக்குள் பரிமாறி வருகின்றனர். 

மீண்டும் நடிப்பாரா ரம்பா?

நடிகை ரம்பா, மீண்டும் தமிழ் திரையுலகிற்குள் ரீ-எண்ட்ரி கொடுப்பாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதற்கு ஒரு நேர்காணலில் பதிலளித்த ரம்பா தான் அது குறித்து யோசித்து வருவதாக பேசியிருந்தார். கனடாவில் இருந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்தார். அப்போது தனது திரை வாழ்க்கை குறித்து அவர் கொடுத்த நேர்காணல்களும், இவர் ரஜினி குறித்து பேசிய ஒரு விஷயமும் பெரிதும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ரம்பாவை பின்னால் தட்டிய ரஜினி..! ஷாக்கான நடிகை..நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News