GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?

GOAT Movie Release Date Postponed : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 18, 2024, 03:48 PM IST
  • கோட் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக இருந்தது
  • ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல்
  • காரணம் என்ன?
GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?  title=

GOAT Movie Release Date Postponed : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தற்போது GOAT (The Greatest Of All Time) படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். 

GOAT படத்தில் விஜய்:

கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஜாலியான இயக்குநராக அறியப்படும் வெங்கட் பிரபுவுடன் இவர் முதன்முறையாக கைக்காேர்த்திருக்கும் படம்தான் கோட். விஜய்யின் 68வது படமான இதை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

கடைசியாக விஜய் நடித்த லியோ திரைப்படமும், வெங்கட் பிரபு கடைசியாக இயக்கிய கஸ்டடி திரைப்படமும் விமர்சன ரீதியாக அடிவாங்கியது. இதனாலேயே இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்தில் இருவரும் கம்-பேக் கொடுப்பர் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி, கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனாலும் இதன் மீது இருக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. 

ரிலீஸ் தேதி:

கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு, வெளிநாடுகளிலும் சென்னையிலும், கேரளாவிலும் மாறி மாறி நடைப்பெற்றது. இயக்குநர் வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் மாறி மாறி படப்பிடிப்பில் நடக்கும் விஷயங்களையும், படம் குறித்த அப்டேட்டுகளையும் ரசிகர்களுக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர். அந்த வகையில், படத்தின் ரிலீஸ் தேதியும் விஜய் பிறந்தநாளான ஜூன் மாதம் 22ஆம் தேதியன்று வெளியானது. அதன்படி, படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் வெங்கட் பிரபுவும், அவ்வப்போது ரிலீஸ் கவுண்ட் டவுன்களை கூறி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் “இன்னும் 68 நாட்கள்தான் இருக்கிறது..” என்ற பதிவை வெளியிட்டிருந்தார்.

தள்ளிப்போகிறதா? 

விஜய் படங்களின் ரிலீஸ், பெரும்பாலான சமயங்களில் தள்ளிப்போகாது. ஆனால், தற்போது கோட் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதியன்று வெளியாக இருந்த இந்த படம், தற்போது கொஞ்சம் தாமதமாக வேறு தேதியில் வெளியிடப்பட இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பை படக்குழுவே விரைவில் வெளியிடும் எனவும் கூறப்படுகிறது. இன்னும் சில பணிகள் படத்தில் முடிக்கப்படாததால் இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், சினிமா வட்டாரங்களில் இருந்து இது போன்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | GOAT படத்தில் எதிர்பாராத கேமியோ கேரக்டர்கள்! த்ரிஷா to விஜயகாந்த்..முழு லிஸ்ட்!

மூன்று மொழிகளில் வெளியாகிறது:

விஜய்யின் படங்கள், எப்போதும் தமிழை தாண்டி வெவ்வேறு மாநில ரசிகர்களையும் ரீச் செய்திருக்கிறது. கேரளாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தமிழ் நடிகர்களுள் முக்கிய இடத்தை பெற்றிருப்பவர் விஜய். இவர் நடித்திருக்கும் கோட் திரைப்படம், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறாது. இது, ஆங்கிலத்திலும் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

கோட் படத்திற்கான விஎஃப்எக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று சமீபத்தில்தான் முடிவு பெற்றது. அது மட்டுமன்றி, இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதும உறுதியாகி இருக்கிறது. இதுவை வெளியான படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மனங்களில் ஓரளவு இடத்தை பிடித்திருக்கிறது. விஜய் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு இப்படத்தில் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார். இவை இரண்டும் பல மில்லியன் வியூஸ்களை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. 

மேலும் படிக்க | GOAT படத்தில் விஜய்க்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News