அதிர்ச்சி! கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்..திரையுலகில் பரபரப்பு..

Latest News Actor Darshan Thoogudeepa Arrest : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, நேற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணி என்ன? முழு விவரத்தை இங்கு காணலாம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2024, 06:46 AM IST
  • கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்
  • அதிர்ச்சிகர உண்மைகள்!
  • நடந்தது என்ன?
அதிர்ச்சி! கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்..திரையுலகில் பரபரப்பு.. title=

Latest News Actor Darshan Thoogudeepa Arrest : பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, 33வயது நபரை கொன்ற வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான பல உண்மைகள் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றன. இதன் பின்னணி என்ன? யார் இந்த தர்ஷன் துகுதீபா?  இவர் தனது ரசிகரை கொன்றதாக கூறப்படுவது ஏன்? அனைத்தையும் இங்கு பார்ப்போம்.. 

யார் இந்த தர்ஷன் தூகுதீபா?

தமிழில் இருக்கும் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் போல கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், தர்ஷன் தூகுதீபா. பழம்பெரும் நடிகர் தூகுதீபா ஸ்ரீனிவாசின் மகனான இவர், 90களில் திரையுதிர்க்குள் நுழைந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்து இருக்கின்றன. இதனாலேயே இவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உண்டு. 47 வயதாகும் இவருக்கு 2003 ஆம் ஆண்டு விஜயலக்ஷ்மி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு வினீஷ் என்ற மகனும் இருக்கிறார். 

தர்ஷனும், முன்னாள் கன்னட நடிகை பவித்ரா கௌடாவும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை எனினும், இவர்களது உறவு கன்னட திரை உலகில் அனைவருக்கும் தெரிந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தர்ஷன்-பவித்ரா ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு ஒன்று  பாய்ந்துள்ளது. 

கொலை வழக்கு: 

பெங்களூருவை சேர்ந்த 33 வயது நபர் ரேணுகா சாமி என்பவரை தர்ஷன் ஆட்களை விட்டு கொன்றதாக கூறப்படுகிறது. பிரபல மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த ரேணுகா சாமியின் உடல் பெங்களூரில் இருக்கும் சுமன்ஹலி பாலத்திற்கு அருகே ஜூன் 9ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இவர் instagram பக்கத்தில் பொய் கணக்கு தொடங்கி, தர்ஷனின் காதலி என கூறப்படும் பவித்ராவிற்கு தகாத வகையில் குறுந்தகவல்கள் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதன் காரணமாக தனது ரசிகர் மன்ற ஆட்களை வைத்து ரேணுகா சாமியை தர்ஷன் கொன்றதாக அவர் மீது வழக்குப்பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் தர்ஷன்-பவித்ரா உள்பட 13 பேர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

அதிர்ச்சி தரும் வாக்குமூலங்கள்: 

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில், ரேணுகா சாமியை பண விவகாரம் காரணமாக தாங்கள் கொலை செய்ததாக கூறி இருவர் காமாக்ஷி பாளையா காவல் நிலையத்தில் இருவர் சரண் அடைந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சரண் அடைந்த இருவர் உட்பட, தர்ஷன்-பவித்ராவிற்கும், இன்னும் 11 பேருக்கும் இதில் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. அதுமட்டுமின்றி கொலை சம்பவம் நடந்த ஜூன் 8ஆம் தேதி (ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட தினம்) இரவு என்னென்ன நடக்கிறது என்பதை தர்ஷனுக்கு whatsapp மூலம் கொலை செய்தவர்கள் தெரிவித்துக் கொண்டே இருந்துள்ளனர். இந்த whatsapp உரையாடலும் போலீசாரால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | சென்னை : துணை நடிகைக்கு பாலியல் தொல்லை - காவல்நிலையத்தில் புகார்

முழு பின்னணி:

இந்த கொலை வழக்கு குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, ரேணுகா சாமி கொலை செய்யப்படுவதற்கு முன் தர்ஷன் அவரை பெல்டால் அடித்ததாகவும் கொலை செய்யும் ஆட்கள் வந்தவுடன் அவர் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இவரை கொலை செய்வதற்காக 30 லட்சம் ரூபாயை தர்ஷன் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசில் சரணடைபவர்களுக்கு ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து தர்ஷன் செட்டில் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் நடிகர் தர்ஷன் மைசூரில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதை எடுத்து இவரை விசாரணைக்காக பெங்களூருவிற்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர். இதே போல அவருடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்படும் பவித்ரா கௌடாவும் தற்போது போலீசாரின் பிடியில் இருக்கிறார். 

தர்ஷனின் மனைவி விஜயலக்‌ஷ்மி, 2011ஆம் ஆண்டு அவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடுத்திருக்கிறார். இதே போல, தர்ஷன் பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பிரபல நடிகர் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் இளம் பெண் தற்கொலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News