Crime: சாப்பாட்டுக்காக மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர்

Karnataka Tumkur Murder: ஆத்திரமடைந்த கணவன் புஷ்பலதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அவரது தலையை அரிவாளால் துண்டித்து உடல் உறுப்புகளை சிதைத்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : May 30, 2024, 07:00 PM IST
  • மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவன்
  • கொடூர கொலை நிகழ்ந்த போது 8 வயது மகன் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
  • போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
Crime: சாப்பாட்டுக்காக மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர் title=

Husband Killed His Wife: கர்நாடக மாநிலம் தும்கூரில் இரவு உணவு பரிமாறாததால் மனைவியைக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸார் இன்று (மே 30, வியாழக்கிழமை) தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியைக் கொன்று, தலையை துண்டித்து, தோல்களை உரித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அந்த நபரின் வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கிருந்த காட்சிகளை பார்த்ததும் ஒருகணம் நடுங்கி உள்ளனர். பெண்ணின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. உடல் முழுவதும் தோலை உரிக்கப்பட்டதால், நரம்புகளும் குடலும் வெளியேறி உள்ளது. அந்த பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை உடலுக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்தது. இச்சம்பவம்  திங்கள்கிழமை (மே 27) இரவு குனிகல் தாலுகாவில் உள்ள ஹுலியுருதுர்கா நகரில் நடந்துள்ளதாக காவல்துறை திகாரிகள் தெரிவித்தனர். 

மரம் அறுக்கும் ஆலையில் பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்ட சிவராமனுக்கும், அவரது மனைவி புஷ்பலதாவுக்கும் (35) அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு, புஷ்பலதா தனது கணவருக்கு இரவு உணவு வழங்காததால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது. 

மேலும் படிக்க - 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!

இதனால் ஆத்திரமடைந்த சிவராமன், புஷ்பலதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். அதன் பின்னர் அவரது தலையை அரிவாளால் துண்டித்து, உடல் உறுப்புகளை சிதைத்துள்ளார். அடுத்த நாள் (மே 28, செவ்வாய் கிழமை) விடியும் வரை கொலை செய்யப்பட்ட மனைவின் உடலை தோலுரித்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனது வீட்டு உரிமையாளரிடம் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடூர செயலின் போது தம்பதியரின் எட்டு வயது மகன் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

இதுகுறித்து தும்கூர் காவல் கண்காணிப்பாளர் அசோக் வெங்கட் கூறுகையில், 'சம்பவத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது கணவரும் சம்பவ இடத்திலேயே இருந்தார். விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்' என்றார்.

மேலும் அவரை நாங்கள் கைது செய்துள்ளோம். சிவராமுக்கும், புஷ்பாவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் நடந்து வந்துள்ளது. வேலை விஷயமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து, அவர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு தனது முதலாளியிடம் அதை தெரிவித்தார். அவர்கள் உடனடியாக எங்களுக்குத் தெரிவித்தனர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க - பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்... சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News