Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!

Thalaivar 171 Latest News : ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இன்று மாலை இப்படம் வெளியாவதை தாெடர்ந்து, இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Apr 22, 2024, 06:20 PM IST
  • தலைவர் 171 டைட்டில் என்ன?
  • முன்கூட்டியே வெளியான தகவல்
  • மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது
Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்! title=

Thalaivar 171 Latest News : தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தற்போது, 73 வயதாகிறது. இந்த வயதிலும் ஓயாமல் படங்களில் நடித்து வரும் அவர், தற்போது தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு, இன்று மாலை 6 மணி அளவில் வெளியாக இருக்கிறது. 

தலைவர் 171:

வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், டாப்பிற்கு சென்று விட்ட லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ மக்களின் கவனத்தை ஈர்க்க, தொடர்ந்து அவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தன. இதை தொடர்ந்து ‘எல்.சி.யு’ எனும் கான்செப்டை கொண்டு வந்த இவர், அடுத்து விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், நல்ல வசூலை பெற்றது. 

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்க இருக்கும் படம் ‘தலைவர் 171’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கான கதை எழுதும் பணிகளில் இறங்கியிருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது அதனை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. 

டைட்டில் என்ன? 

தலைவர் 171 படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என லோகி, நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, படத்தின் டைட்டில் குறித்த தகவல்களும் வெளிவர தொடங்கின. கூடவே, தலைவர் 171 படத்தின் போஸ்டரையும் ரசிகர்கள் டீ-கோட் செய்ய தொடங்கினர். ரஜினி, படத்தின் போஸ்டரில் கையில் கடிகாரங்களால் ஆன கைவிலங்கை போட்டவாறு இருந்தார். அவை அனைத்தும் தங்க கடிகாரங்களாக இருந்தன. அதே போல, ரஜினிகாந்த் 1983ஆம் ஆண்டு ‘தங்கமகன்’ என்ற பெயரில் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கதை போல, தற்போது லோகி ஒரு படத்தை எடுத்திருப்பதாகவும் அதனால் ‘தலைவர் 171’ படத்திற்கு ‘தங்கம்’ என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் படத்தின் பெயர் “RaNaa” வாகவும் இருக்கலாம் என சில திரை வட்டாரத்தினர் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | விவாகரத்தில் முடிந்த திருமணம்..தாங்க முடியாத சாேகம்! மனம் திறந்த டிடி!

மாலை 6 மணிக்கு டைட்டில் வெளியானவுடன்தான், இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியவரும். 

லோகியை காப்பாற்றுவாரா ரஜினி?

லோகேஷ் கனகராஜ், தான் எடுத்த கடைசி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளானார். இதே நிலைதான் ரஜினியின் கடைசி படத்தை எடுத்த நெல்சனுக்கும். அவர் பீஸ்ட் படத்தை எடுத்து ரசிகர்களின் வசை பாடல்களுக்கு ஆளான பின்பு, ஜெயிலர் படத்தை இயக்கினார். இப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து ரஜினியால் நெல்சன் காப்பாற்றப்பட்டதாக ரசிகர்கள் பலர் தெரிவித்தனர். அதே போல, தற்போது லியோ படத்தால் விமர்சனங்களுக்குள்ளான லோகியும் ரஜினியை வைத்து படம் எடுக்கிறார். அதனால் இப்படமும் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். 

வேட்டையன் படத்திற்கு பிறகு..

ரஜினிகாந்த், தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இணைகிறார். இவர் மட்டுமன்றி, பகத் பாசில், ராணா, ஷர்வானந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்கள் மட்டுமன்றி, நடிகைகளில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் வேலைகள் முடிந்த பிறகு, தலைவர் 171 பட வேலைகளில் ரஜினிகாந்த் இறங்குவார் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 3 மணி நேரத்திற்குள் நல்ல தமிழ் படம் பார்க்க வேண்டுமா? ‘இதை’ பாருங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News