How To Develop Children Memory : இந்தியாவையே தனது செஸ் விளையாடும் திறமையால் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார், 18 வயது குகேஷ். 18வது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைப்பெற்றது. இதில், சீனாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் டிங் லைரனை தோற்கடித்து, இளமையான உலக செஸ் சாம்பியனாக மாறியிருக்கிறார் குகேஷ். இவரை நினைத்து இந்தியாவே பெருமை கொண்டிருக்கும் வேளையில், ஒரு சில பெற்றோர்கள், தங்கள் குழந்தையையும் எப்படி குகேஷ் போல வளர்ப்பது என பிளான் போட ஆரம்பித்து விட்டனர். உங்கள் குழந்தைகளும் அது போல அறிவாளியாக மாற வேண்டும் என்றால், சில பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
நினைவாற்றல் திறன்:
நினைவாற்றலை அதிகரிக்கும் விளையாட்டுகள்:
அவர்களின் நினைவாற்றலை தூண்ட சில விளையாட்டுகளை விளையாட வேண்டும். கார்ட் கேம், வார்த்தை விளையாட்டுகள் ஆகியவற்றை அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம்.
கதைகளை மீண்டும் கூறுதல்:
முன்னர் நீங்கள் கூறிய கதையை அல்லது அடிக்கடி கூறும் கதையை அவர்களிடம் மீண்டும் கூறச்சொல்லி கேட்க வேண்டும்.
காட்சி நினைவகப் பயிற்சி:
உங்கள் குழந்தைகளுக்கு காட்சி நினைவக பயிற்சிகளை அளிக்க வேண்டும். அவர்களிடத்தில் ஒரு புகைப்படத்தை காண்பித்து, அதில் இருந்ததை கூற சொல்ல வேண்டும்.
பிரச்சனை தீர்க்கும் திறனை வளர்த்தல்:
புதிர் விளையாட்டுகள்: ஜிக்ஸா விளையாட்டு புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள், சுடோகு ஆகிய விளையாட்டுகளை விளையாட வையுங்கள்.
கட்டட விளையாட்டுகள்:
ப்ரிக்ஸ் விளையாட்டுகள், எதையாவது கட்டுவது அல்லது உருவாக்குவது உள்ளிட்ட பயிற்சிகளை அவர்களை மேற்கொள்ள செய்ய வேண்டும்.
கேள்வி விளையாட்டுகள்:
உங்கள் குழந்தைகளிடம் அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்டு, அவர்களை பதில் சொல்ல வைக்க வேண்டும். “உனக்கு ஒரு நாள் அனைவர் கண்களில் இருந்தும் மறையும் திறன் கிடைத்தால் என்ன செய்வாய்?” போன்ற கேள்விகளை கேட்க வேண்டும்.
கவனத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்:
மூச்சுப்பயிற்சி: குழந்தைகளுக்கு மூச்சுப்பயிற்சி செய்ய சொல்லிக்கொடுக்க வேண்டும். ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்து, அதன் மீது கவனம் செலுத்தி, மூச்சு விட சொல்ல வேண்டும்.
நேரத்தை அமைத்து விளையாட செய்ய வேண்டும்: குழந்தைகளிடம் ஒரு டாஸ்கை கொடுத்து, அதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை முடிக்க சொல்ல வேண்டும்.
வித்தியாசங்களை கண்டுபிடிக்கும் விளையாட்டுகள்:
8 வித்தியாசங்களை கண்டுபிடிக்கும் விளையாட்டுகள், ஒரே மாதிரி புகைப்படங்களில் இருக்கும் வித்தியாசங்களை கண்டுபிடிக்க செய்வது போன்ற விளையாட்டுகளை விளையாட செய்ய வேண்டும்.
படைப்பாற்றலை வளர்ப்பது:
வண்ணம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை அவர்களை சொல்லிக்கொடுக்கலாம். கலரிங் புக், ஒரு புக்கில் படம் வரைய செய்தல் போன்றவற்றை செய்யலாம்.
எழுதுதல்: குழந்தைகளிடம் ஒரு சூழலை சொல்லி, அதை எழுத சொல்லலாம். உதாரணத்திற்கு, “மழை பெய்யும் நாளில் உங்கள் மனம் எப்படி இருக்கும்? பறக்கும் சக்தி கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” போன்ற சூழலை கொடுத்த எழுத செய்ய வேண்டும்.
பேசும் திறன்:
ஒன்றாக செய்யும் வேலைகள்: உங்கள் குழந்தையுடன் சேர்ந்து புத்தகம் படிப்பது, அந்த புத்தகத்தை பற்றி பேசுவது உள்ளிட்ட விஷயங்களை செய்யலாம்.
வார்த்தை விளையாட்டுகள், கதை ச் ஒல்ல வைப்பது, ஒரு புகைப்படத்தை வைத்து கதை சொல்ல வைப்பது போன்ற விளையாட்டுகளை செய்ய சொல்லலாம்.
உடற்பயிற்சிகள்:
பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் உடற்பயிற்சி செய்யலாம். 9-11 மணி நேர தூக்கம், ஹெல்தி டயட் உள்ளிட்டவற்றை அவர்களது தினசரி நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும்.
மேலும் படிக்க | இல்லற வாழ்வில் இன்பத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? சுதா மூர்த்தி கொடுக்கும் டிப்ஸ்!
மேலும் படிக்க | 2025 புது வருடம் வருவதற்குள் படிக்க வேண்டிய 7 புத்தகங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ