Squid Game 2 விரைவில் ரிலீஸ்! எந்த தேதியில் வெளியாகிறது தெரியுமா?

Latest News Squid Game 2 Release Date : உலகளவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த Squid Game தொடரின் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாக இருக்கிறது. எப்போது தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 1, 2024, 12:33 PM IST
  • ஸ்குவிட் கேம் சீசன் 2 ரிலீஸ் தேதி
  • இந்த ஆண்டில் வெளியாகிறது!
  • என்ன தேதியில் தெரியுமா?
Squid Game 2 விரைவில் ரிலீஸ்! எந்த தேதியில் வெளியாகிறது தெரியுமா? title=

Latest News Squid Game 2 Release Date : உலக சினிமா ரசிகர்களை கவர்ந்த தொடர்களுள் ஒன்று, ஸ்குவிட் கேம். கொரிய மொழியில் உருவான இந்த தொடரின் கதையும், கதாப்பாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்தன. தற்போது இந்த தொடரின் இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

ஸ்குவிட் கேம்:

விளையாட்டில் விபரீதம் இருக்க கூடாது என்று கூறுவார்கள். ஆனால், இங்கு விபரீதத்தை கையில் வைத்துக்கொண்டுதான் விளையாட்டே! பணம் தேவைப்படுவோர், நலிந்த நிலையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை ஒரு இடத்திற்கு கூட்டிச்சென்று குழந்தைகளின் விளையாட்டை விளையாட வைக்கின்றனர். அதில் தோற்றால் துப்பாக்கியை வைத்து நெற்றியில் ஒரே போடு போடுகின்றனர். இப்படி, சுமார் 456 விளையாட்டு வீரர்களுடன் இப்போட்டி தொடங்கப்படுகிறது. இதில், இறுதியில் யார் ஒருவர் வெற்றி பெறுகிறாரோ, அவருக்குத்தான் 45.6 மில்லியன் வான் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இதில், ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் மாய்த்துக்கொள்ளும் போட்டியும் வைக்கப்படுகிறது. இதில் இறுதியில் வென்றது யார்? யாருக்கு அந்த பரிசுத்தொகை கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது கதை. 

மரண பயத்தை காட்டும் திரைக்கதை:

ஸ்குவிட் கேம் தொடரை பொறுத்தவரை, அதில் யாரும் இதுவரை பார்த்திராத, யாரும் எந்த தருணத்திலும் எதிர்பார்த்திராத திருப்பங்களை கொண்ட இந்த தொடரை இளகிய மனம் கொண்டவர்கள் கூட கண்களை பொத்திக்கொண்டு பார்த்து முடித்தனர். அதிலும் குறிப்பாக “ரெட் லைட்-கிரீன் லைட்” விளையாட்டில், பொம்மை தன் கண் முன்னே அசைவாேரை போட்டுத்தள்ளும் காட்சி “என்னடா நடக்குது இங்க..” என அனைவரையும் அலற வைத்தது. அதே போல, இறுதி காட்சியில் அனைவரது கண்களைும் கலங்கவும் வைத்தது.

மேலும் படிக்க | Watcho App: கொரிய தொடர்கள் பிடிக்குமா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!!

சீசன் 2 வருகிறது:

ஸ்குவிட் கேம் தொடரின் முதல் சீசன் முடிவிலேயே, அடுத்த சீசனுக்கான ஹிண்ட் உடன்தான் முடித்தனர். இதில், அப்போட்டியில் இருந்து வெளிவந்த நாயகன், மீண்டும் அப்போட்டிக்குள் நுழைவது போன்று க்ளைமேக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாவது சீசன் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சீசன் வெளியானதை தொடர்ந்து. இரண்டாவது சீசன் எப்போது வெளியாகிறது என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் வீடியோவில், “மூணு வருஷம் ஆயிருச்சு..மீண்டும் விளையாடலாமா?” என மாஸ்க் பாேட்ட கொலையாளி கேட்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. மேலும், ஓடுதளத்தில் கோட்டை தாண்டு ஓடுபவர்கள் அடுத்தடுத்த சரிந்து விழும் காட்சியும் இதில் இடம் பெற்றிருக்கிறது. எனவே, இரண்டாவது சீசன் முதல் சீசனை விட சளைத்ததாக இருக்காது என்று கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இத்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

Squid Games

மூன்றாவது சீசனும் உருவாகிறது:

இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்த வேளையிலேயே, மூன்றாவது சீசன் எப்போது வெளிவரும் என்ற அறிவிப்பையும் அந்த தொடரின் குழு வெளியிட்டிருக்கிறது. வரும் 2025ஆம் ஆண்டு, மூன்றாவது சீசன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்குவிட் கேம் தொடரின் மீது இருந்த பிரியத்தால், பல இடங்களில் உண்மையாகவே அதில் இடம் பெற்றிருந்த விளையாட்டு தளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மக்கள் பலர் பங்கேற்கவும் செய்தனர். 

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் மாஸான புது படங்கள் ரிலீஸ்! எதை, எதில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News