Maharaja Review : விஜய் சேதுபதியின் மகாராஜா படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம்..

Maharaja Movie Twitter Review : விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன? இங்கு பார்ப்போம்!

Written by - Yuvashree | Last Updated : Jun 14, 2024, 06:50 AM IST
  • மகாராஜா படத்தின் விமர்சனம்
  • விஜய் சேதுபதியின் 50வது படம்
  • ரசிகர்கள் பாசிடிவான விமர்சனம் கொடுத்திருக்கின்றனர்
Maharaja Review : விஜய் சேதுபதியின் மகாராஜா படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம்.. title=

Maharaja Movie Twitter Review : தமிழ் திரையுலகை தாண்டி, இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு, மகாராஜா 50வது படமாகும். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த சமீபத்திய படங்கள் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற தவறி வந்தன. மாறாக அவர் கேமியோ ரோலில் நடிக்கும் படங்களும், வில்லனாக நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. இதையடுத்து, மகாராஜா படத்தின் ட்ரைலர் வெளியான போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதை மகாராஜா படம் பூர்த்தி செய்திருக்கிறதா?

மகாராஜா திரைப்படம்:

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது, மகாராஜா. இதில், விஜய் சேதுபதி நடிக்க அவருடன் மமதா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமான அனுராக் காஷ்யப் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டிய விஷயங்களுள் ஒன்று, படத்தின் காஸ்டிங்தான்! சரி, இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன? இங்கு பார்ப்போம். 

விஜய் சேதுபதியின் நடிப்பு:

படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் ரசிகர், மனதை உடைக்கும் படம் என்று இந்த படத்திற்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

விஜய் சேதுபதி உள்பட அனைவரும் சிறப்பாக நடித்திருப்பதாகவும் கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் இப்படத்தை பார்க்க வேண்டும் என்றும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.

நல்ல படம்:

இந்த வருடம் வந்ததிலேயே இதுதான் மிகவும் நல்ல படம் என்று ஒரு ரசிகர் புகழ்ந்து இந்த படத்தை எழுதியிருக்கிறார்.

மேலும், நல்ல திரைக்கத்ஹை என்றும் முதல் பாதி மிகவும் நன்றாக செல்வதாகவும் இரண்டாம் பாதி உயிர்ப்புடன் இருப்பதாகவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். அனைத்து கதாப்பாத்திரங்களும் கதையுடன் பொருந்தி போவதாகவும் அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!

நடிகர்களுக்கு பாராட்டு:

மகாராஜா படத்தின் ப்ரெஸ் ஷோ பார்த்த ஒருவர், தனது விமர்சனத்தை ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில், சமீப காலங்களில் வந்த விஜய் சேதுபதியின் படங்களில் இப்படம் அனைத்தையும் தூக்கி சாப்பிட்டுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். 

வில்லனாக நடித்த அனுராக்காஷ்யப், அபிராமி, முனிஸ்காந்த் என அனைவரும் பிரத்யேகமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் அந்த பத்திரிகையாளர் தெரிவித்திருக்கிறார். 

பிற ஊடகங்களில் இருந்து வரும் விமர்சனங்களும் மகாராஜா படத்திற்கு சாதகமாகவே அமைந்திருக்கின்றன. ஆதலால், இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | Vijay Sethupathi: பெரிய வீடு, ஆடம்பர கார்-அசர வைக்கும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News