லியோ திரைப்படம்: விஜய்க்கு மகனாக நடித்க மாத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Mathew Thomas Salary for Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் விஜய்ககு மகனாக மாத்யூ தாமஸ் நடித்திருந்தார். 

Written by - Yuvashree | Last Updated : Nov 4, 2023, 11:57 AM IST
  • மலையாள நடிகர் மாத்யூ தாமஸ்.
  • விஜய்க்கு மகனாக லியோ படத்தில் நடித்துள்ளார்.
  • இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
லியோ திரைப்படம்: விஜய்க்கு மகனாக நடித்க மாத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?  title=

விஜய்யுடன் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் கைக்கோர்ந்திருந்த படம் லியோ. இதில், விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இவர்களுக்கு இப்படத்தில் விஜய்-த்ரிஷாவிற்கு 16 வயது மகனும், 5 வயதில் ஒரு மகளும் இருப்பர். இதில், விஜய்க்கு மகனாக மலையாள நடிகர் மாத்யூ தாமஸ் நடித்துள்ளார். 

மாத்யூ தாமஸ்:

மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான கும்பலங்கி நைட்ஸ் எனும் படத்தில் நடித்து அறிமுகமானவர், மாத்யூ தாமஸ். இதையடுத்து தண்ணீர் மத்தன் தினங்கள், அஞ்சம் பதிரா, ஜோ ஜோ போன்ற பல படங்களில் துடிப்பான இளைஞராக நடித்து பிரபலமானார். இவர், தமிழில் அறிமுகமாகியிருக்கும் படம், லியோ. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவனாக நடித்திருந்தார். சித்தார்த் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர், இந்த படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம், 50 முதல் 70 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

மகளாக நடித்த குட்டி பெண்..

லியோ படத்தில் விஜய்-த்ரிஷாவிற்கு இரண்டாவது மகளாக இயல் என்ற குழந்தை நடித்திருக்கிறார். இப்படத்தில், இவரது கதாப்பாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. லியோ படத்தில் இந்த குழந்தையின் பெயர் மதி. படத்தில் துரு துரு குழந்தையாக வரும் இவர், நிஜ வாழ்க்கையிலும் அதே போலத்தான் சுட்டி குழந்தையாக இருப்பார் என கூறப்படுகிறது. இவர் பிரபல நடிகர் ஒருவரின் மகள் என்பது உங்களுக்கு தெரியுமா? 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!

யாரருடைய மகள் அவர்? 

2021ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தவர், பாலாஜி மோகன். இதையடுத்து வாயை மூடி பேசவும், ஆதலால் காதல் செய்வீர், அரிமா நம்பி, டார்லிங் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து விட்டார். பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் முக்கிய காமெடி கதாப்பாத்திரமாக வந்துள்ளார். இவருக்கு இலன் மற்றும் இயல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரட்டை குழந்தைகளான இயல்-இலன் இரண்டு பேருமே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வருகின்றனர். கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ படத்தில் இவரது மகன் இலன் நடித்துள்ளார். 

விஜய்யின் சம்பளம்..

லியோ படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் ரூ.120 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் நடிக்கும் ‘தளபதி 68’ படத்திற்காக ரூ.150 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகர் விஜய்யை அடுத்து இப்படத்தில் அதிக சம்பளம் வாங்கியுள்ள நடிகர் சஞ்சய் தத். கே.ஜி.எஃப் படம் மூலம் பான் இந்திய அளவில் பெரிய நடிகரான இவர் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருக்கிறார். லியோ படத்தில் இவர் ஆண்டனி தாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர், இப்படத்தில் நடிக்க ரூ.8 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | லியோவில் விஜய்யுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? ‘இந்த’ நடிகரின் மகள்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News