சந்திரமுகி: பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' படமும் கன்னட படத்தின் ரீமேக் தான். இந்த படத்தில் ஜோதிகா, பிரபு, வடிவேலு, நயன்தாரா போன்ற பலர் நடித்துள்ளனர். தமிழில் சூப்பர் ஹிட் அடித்த இந்த திரைப்படம் கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான 'ஆப்தமித்ரா' படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் சௌந்தர்யா, விஷ்ணுவர்தன், ரமேஷ் அரவிந்த், பிரேமா போன்ற பலர் நடித்திருந்தனர். கன்னடத்தில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியினை தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக் செய்து வெளியிடப்பட்டு மாபெரும் ஹிட் அடித்தது. இப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடியது.
மேலும் படிக்க | ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு இவ்வளவு படங்கள் ரிலீசா?
ரிச்சி :
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ரிச்சி’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதையும் நடிகர் நிவின் பாளி கவர்ந்தார். 2014 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘உளிடவரு கண்டந்தே’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ‘ரிச்சி’ படம். கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா சந்திரமௌலி, பிரகாஷ் ராஜ், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
யு-டர்ன்:
பவன் குமார் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில்வெளியான படம் 'யு டர்ன்'. இந்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, இந்த படமும் கன்னட மொழி படத்தின் ரீமேக் ஆகும். 2016 ஆம் ஆண்டு இதே பெயரில் கன்னட மொழியில் இந்த படம் வெளியானது. கன்னட மொழியில் இந்த படத்தில் சமந்தாவிற்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார்.
கபடதாரி:
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான படம் 'கபடதாரி'. இந்த படம் 2019 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'காவலுதாரி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சூப்பர்ஹிட் கன்னட படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது, தெலுங்கு வெர்ஷனை காட்டிலும் இப்படத்தின் தமிழ் வெர்ஷன் வெற்றியை பெற்றது. இந்த படம் நடிகர் சிபிராஜுக்கு ஒரு சிறந்த கம்பேக்காக அமைந்தது.
சிவலிங்கா:
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் படம் தான் 'சிவலிங்கா'. இந்த படம் 2016ம் ஆண்டு இதே பெயரில் வெளியான கன்னட படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் ஆகும், பி.வாசு தான் இந்த படத்தை கன்னடத்தில் இயக்கினார், இதில் கதாநாயகனாக சிவராஜ்குமார் நடித்திருந்தார். இந்த ஹாரர் படத்தில் ரித்திகா சிங், சக்தி, வடிவேலு, ஊர்வசி, ராதாரவி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மேலும் படிக்க | ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு படத்துக்கே இவ்வளவு சம்பளமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ