ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு இவ்வளவு படங்கள் ரிலீசா?

ஏப்ரல்-14ம் தேதியன்று தமிழ் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ் மொழியில் உருவாகியுள்ள சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 5, 2023, 08:42 AM IST
  • ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான 'ருத்ரன்' ஏப்ரல்-14ல் வெளியாகிறது.
  • விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்-2' படம் ஏப்ரல்-14ல் வெளியாகவில்லை.
  • ஏப்ரல்-14ம் தேதியன்று தமிழில் நான்கு படங்கள் வெளியாகவுள்ளது.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு இவ்வளவு படங்கள் ரிலீசா? title=

ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல்:

ருத்ரன்: 

எஸ்.கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான 'ருத்ரன்' ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், நாசர் மற்றும் சச்சு ஆகியோர் நடித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க | இந்த நடிகரை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா..வெளியான போட்டோ

தமிழரசன்: 

பாபு யோகிஸ்வரன் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் ஏப்ரல் 14ம் தேதியன்று 'தமிழரசன்' படம் வெளியாகவுள்ளது.  இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, சோனு சூட், சுரேஷ் கோபி, யோகி பாபு மற்றும் சங்கீதா க்ரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது, இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

யானை முகத்தான்:

மலையாள இயக்குனரான ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகி பாபுவை வைத்து 'யானை முகத்தான்' எனும் படத்தை இயக்கியுள்ளார், இப்படம் ஏப்ரல்14-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.  இப்படத்தில் உதய் சந்திரா, கருணாகரன், ஊர்வசி, ஹரீஷ் பெரேடி போன்ற பலர் நடித்துள்ளனர்.  மனிதனுக்கும், கடவுளுக்குமான பிரச்னையை கூறும் விதமாக நகைச்சுவையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

சொப்பன சுந்தரி:

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சொப்பன சுந்தரி' படம் ஏப்ரல்-14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்துள்ள இந்த படத்தில் லட்சுமி ப்ரியா, கருணாகரன், தீபா சங்கர், தென்றல், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  

பிச்சைக்காரன்-2:

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள 'பிச்சைக்காரன்-2' படம் ஏப்ரல்-14ம் தேதியன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.  மே 12ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது.  இப்படத்தில் யோகி பாபு, காவ்யா, ஜான் விஜய், மன்சூர் அலிகான் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது! வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News