தளபதி 67.. இன்னும் தோ கிலோ மீட்டர்.. வாரிசுகளை புலம்பவிடும் லோகேஷ்!

Thalapathy 67 Update: கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற திரைப்பட நிகழ்வில், தளபதி 67 அப்டேட் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 25, 2023, 07:33 PM IST
  • தளபதி 67 படத்தின் அப்டேட் ஜன. 26ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
  • ஆனால், லோகேஷ் புதிய தகவலை அளித்துள்ளார்.
  • டீசர் மற்றும் படத்தின் பெயர் முதலில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தளபதி 67.. இன்னும் தோ கிலோ மீட்டர்.. வாரிசுகளை புலம்பவிடும் லோகேஷ்!

Thalapathy 67 Update: தமிழ் சினிமாவில் தற்போது மிகுந்த  எதிர்பார்ப்பாக பார்க்கப்பட்டு வரும் படம் தளபதி 67 படத்தின் முதற்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்பே எக்கசக்க எதிர்பார்ப்பு படத்தின் மீது எழுந்துள்ளது. காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கடந்த படமான விக்ரம், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று,  மாபெரும் வசூல் சாதனை படைத்திருந்தது.

அதேபோன்று விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் வந்த மாஸ்டர் திரைப்படமும் கொரோனாவிற்கு பிறகு மக்களை திரையரங்கம் நோக்கி படை எடுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து எடுப்பதால்தான் இத்தகைய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாரிசு படம் வெளியான நாளில் இருந்தே தளபதி 67 அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களை அதிர விட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த சூழலில் கோவைக்கு கல்லூரி நிகழ்வில் கலந்துக்கொள்ள வந்தபோது தளபதி 67 என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தற்போது இயக்குனர் லோகேஷ் அளித்த பதில் மீண்டும் சமூக வலைத்தளத்தை புரட்டிப்போட்டுள்ளது என்று சொல்லலாம்.

மேலும் படிக்க | அந்த மனசு இருக்கே... பிக்பாஸில் ஜெய்த்த பணத்தை தானம் கொடுத்த அசீம்

 இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு படமான மைக்கேல், வரும் பிப். 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து அவர்,"தளபதி 67 பட அப்டேட்டின் ஹிண்ட் வேண்டுமென்றால் தருகிறேன். பிப். 1, 2, 3 ஆகிய நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், அப்டேட் வருகிறது! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்" என கல்லூரி மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார். தொடர்ந்து, அரங்கில் இருந்த மாணவர்கள் விசில் அடித்து கரகோஷம் எழுப்பி அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படத்திற்கு பெயர் மற்றும் படத்துக்கு டீசர் ஒன்று ரெடி செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பதான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News