விமல்-ன் களவாணி-2 திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல்...

விமல் நாயகனாக நடித்து வெளிவர காத்திருக்கும் களவாணி 2 திரைப்படத்தை ஜீன் 10-ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Last Updated : Apr 22, 2019, 10:17 PM IST
விமல்-ன் களவாணி-2 திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல்... title=

விமல் நாயகனாக நடித்து வெளிவர காத்திருக்கும் களவாணி 2 திரைப்படத்தை ஜீன் 10-ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஸ்ரீதனலட்சுமி நிறுவனத்தின் உரிமையாளர் குமரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிரப்பித்துள்ளது.

ஓவியா, நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படம் வரும் மே 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இத்திரைப்படத்தை தமிழகம் மற்றும் புதுவையில் வெளியிடுவதற்கான திரையரங்க உரிமையை சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த  ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பெற்றிருந்தது.

ஒப்பந்த விதிகளை ஒப்பந்தம் செய்து கொண்ட மெரினா பிக்சர்ஸ் நிறுவனம் கியூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்திற்கு சில நிறுவனங்களின் பங்களிப்போடு களவாணி 2 படத்தை வெளியிடும் உரிமையை தமிழகம், புதுவையில் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு படம் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தை மீறி விதிமீறல்கள் நடந்துள்ளதால் ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்படும் என கூறி, களவாணி 2 படத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒ.குமரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வரும் ஜூன் 10-ஆம் தேதி வரை களவாணி-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கில் மெரினா பிக்சர்ஸ், ஏ3வி சினிமாஸ், வருமன்ஸ் ப்ரோடெக்சன்,  ஜெமினி எஃப் எக்ஸ், கியூப் சினிமா டெக்னாலஜிஸ் நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

Trending News