மகேஷ் பாபு - ராஜமௌலி படத்திற்கு கதையே இல்லாமல் 800 கோடி பட்ஜெட்டா?

'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து பெரிய பட்ஜெட் படமொன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 3, 2022, 06:10 PM IST
  • RRR திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
  • ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க உள்ளார்.
  • இப்படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
மகேஷ் பாபு - ராஜமௌலி படத்திற்கு கதையே இல்லாமல் 800 கோடி பட்ஜெட்டா?  title=

சமீபத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கே.விஜயேந்திர பிரசாத் கைவண்ணத்தில், என்டிஆர் ,மற்றும் ராம்சரண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'.  இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பையும் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.  அதனையடுத்து தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ் பாபுவை வைத்து இயக்குனர் ராஜமௌலி இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து தெலுங்கு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!

இவர்கள் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் பட்ஜெட் குறித்து ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் சமீபத்தில் இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான கே.விஜயேந்திர பிரசாத்திடம் நடத்தப்பட்ட நேர்காணலில் சில கேள்விகள் கேட்கப்பட்டது.  அதில் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் படத்தின் பட்ஜெட் 800 கோடி என்று சில என்று கேள்வி எழுப்பப்பட்டது.   இந்த கேள்விக்கு பதிலைத்தவர் சிறிது நக்கல் கலந்த புன்னகையுடன் கதையே இல்லாமல் 800 கோடி பட்ஜெட்டில் படமா? என்று நகைச்சுவையாக கேட்டார்.  பின்னர் கூறியவர், நிச்சயம் ராஜமௌலி எடுக்கும் இந்த படம் அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் என்று கூறினார்.

rajamouli

மேலும் அவர் கூறுகையில், கூடிய விரைவில் படத்திற்கான கதையை தயார் செய்து எப்படியும் இந்த வருடத்தின் இறுதிக்குள் ராஜமௌலி படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்.  இதுவரை அவர் இயக்கத்தில் உருவான படங்களை போலவே இந்த படமும் நல்லதொரு வரவேற்பை பெரும் என்றும் கூறியுள்ளார்.  ராஜமௌலி மற்றும் விஜயேந்திர பிரசாத் மேஜிக்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

மேலும் படிக்க | இந்த இரண்டு ஸ்டார் ஜோடிகள் விரைவில் திருமணம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News