KGF 2 வெற்றியால் தூக்கத்தை இழந்த மகேஷ் பாபு! ஏன்?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப்-2 உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2022, 06:04 PM IST
  • KGF 2 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
  • பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து படம் இயக்குகிறார்.
  • இந்த கதையில் மகேஷ் பாபு நடிப்பதாக இருந்தது.
KGF 2 வெற்றியால் தூக்கத்தை இழந்த மகேஷ் பாபு! ஏன்? title=

ஊடங்கங்கள் முழுவதும் ஒலிக்கும் ஒரு படத்தின் பெயர் எதுவென்றால் அது 'கேஜிஎஃப்-2' தான், இந்த படம் எதிர்பார்த்ததையும் மீறி அதிகப்படியான வெற்றியை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது.  உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேஜிஎஃப்-2 தனது வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது என்றும் கூறலாம். கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை விட இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.  தமிழில் எதிர்பார்த்த நட்சத்திரங்களின் படங்கள் ரசிகர்களுக்கு திருப்தியளிக்காத நிலையில் மாற்று மொழி படமானது இது திருப்தியை அளித்து இருக்கிறது.

மேலும் படிக்க | விலையுயர்ந்த காரை வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்! விலை இத்தனை கோடியா?

தற்போது இப்படத்தின் வெற்றியானது பிரசாந்த் நீல் இயக்கத்தில் வரவிருக்கும் 'சலார்' படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும் இப்படத்தில் ஜெகபதி பாபு, சுருதி ஹாசன், பிரித்விராஜ், ஈஸ்வ்ரி ராவ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெளியீட்டிற்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கென பிரத்யேகமாக ஒரு கதையை உருவாக்கி அவரிடம் கூறியிருக்கிறார்.  ஆனால் இந்த படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் மகேஷ் பாபு படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.  

maheshbabu

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு மறுத்த கதை தான் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படம் என்று கூறப்படுகிறது.  மகேஷ் பாபு கதையை நிராகரித்ததோடு இயக்குனர் இந்த கதையை பிரபாஸிடம் கூற அவர் ஒப்புதல் தெரிவித்துவிட்டாராம்.  தற்போது அவரது இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப்-2 வெற்றிபெற்றதும், சலார் படத்தின் வெற்றியை கொண்டாட பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.  இந்த கதையை ஓகே செய்திருந்தால் பிரஷாந்த் நீல் உடன் பணியாற்றும் முதல் தெலுங்கு ஹீரோவாக மகேஷ் பாபு இருந்திருப்பார்.  இந்நிலையில் 'கேஜிஎஃப்-2' படம் போன்று 'சலார்' படமும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாறினால் நடிகர் மகேஷ் பாபு மிகவும் வருந்துவார், இப்படத்தின் வெற்றியால் அவரது நிம்மதி கெட்டுவிடும் என்று பலரும் திரைவட்டாரங்களில் கூறப்படுகிறது.

salaar

மேலும் படிக்க | கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளர் ஒரு இருப்பு தொழிலாளியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News