தளபதி 66 படத்தில் மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் இது தானா?

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 66' படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 15, 2022, 08:36 PM IST
  • விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
  • விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
  • அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
தளபதி 66 படத்தில் மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் இது தானா? title=

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறந்த முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் மகேஷ் பாபு.  இந்த இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, அதுமட்டுமல்லாது இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களும் நல்ல நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.  இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இந்த இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்.  அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதாவது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தற்போது விஜய் 'தளபதி 66' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார், அந்த படத்தில் தான் தெலுங்கு பிரபலம் மகேஷ் பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜைவிட அதிக சம்பளம் வாங்கும் நெல்சன் திலீப்குமார்

இந்த இரண்டு நட்சத்திரங்களும் ஒன்றினையும் செய்தியை கேட்ட ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  வம்சி இயக்கத்தில் ஏற்கனவே மகேஷ் பாபு நடித்திருந்த மகரிஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, அதன் மூலம் மகேஷ் பாபுவுடன் நல்ல நண்பரான இயக்குனர் வம்சி தான் இயக்கம் தளபதி 66 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்குமாறு மகேஷ் பாபுவை கேட்டுக்கொண்டுள்ளார்.  அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் உடனே நடிகர் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.  மேலும் அவர் இந்த படத்தின் ஆரம்பத்தில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த பின்னணி குரல் கொடுக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.  

இப்படக்குழு முதல்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துவிட்டு தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகளை செய்துகொண்டு இருக்கிறது.  மீண்டும் படக்குழு சில பணிகளுக்காக ஹைதராபாத் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இப்படத்தில் ராஷ்மிகா, பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், குஷ்பூ, சங்கீதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | லோகேஷுக்கு கார்.. சூர்யாவுக்கு வாட்ச்.. அனிருத்துக்கு கமல் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News