குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை - மகேஷ்பாபு நிதியுதவி

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு 30 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2022, 06:03 PM IST
  • மகேஷ்பாபு நிதியுதவி
  • ஆளுநர் பாராட்டிய நிகழ்வு
  • இதய அறுவை சிகிச்சை மகேஷ்பாபு நிதியுதவி
குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை - மகேஷ்பாபு நிதியுதவி title=

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு.தற்போது இவர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.  அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படமானது மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.  மேலும் அவர் ராஜமௌலி இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு 800 கோடி ரூபாய் பட்ஜெட் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்,3 0 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு மகேஷ்பாபு நிதியுதவி அளித்திருக்கிறார். இதுகுறித்து அவரது மனைவி நம்ரதா ஷிரோத்கார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

Maheshbabu

இந்த நிகழ்வை ஆளுநர் ஸ்ரீ பிஸ்வபூசன் ஹரிசந்தன் பாராட்டினார். தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிய ஆந்திர மருத்துவமனை மருத்துவக் குழுவுக்கு நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | விஜய் குறித்து 2018-ல் ராஷ்மிகா போட்ட ட்வீட்! அப்பவே இப்படியா?

முன்னதாக தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் தலா ஒரு கிராமத்தை மகேஷ்பாபு தத்தடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தளபதி 66 படத்தில் இணைந்த இரண்டு முக்கிய நடிகர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News