பிரபல மலையாள நடிகர் Tovino Thomas ICU-வில் அனுமதி

காலா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சியின் போது தான் டோவினோ தாமஸ் மோசமாக காயமடைந்ததாகவும் அவரது மேலாளர் கூறியுள்ளார். 

Written by - ZEE Bureau | Last Updated : Oct 7, 2020, 07:49 PM IST
  • பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமசுக்கு திரைப்படத்தின் செட்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • வலி மிகுதியானதால் மருத்துவமனையில் தாமஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • 'காலா' என்ற படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
பிரபல மலையாள நடிகர் Tovino Thomas ICU-வில் அனுமதி

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் 'காலா' என்ற மலையாள திரைப்படத்தின் செட்களில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு அறிக்கையின்படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

காலா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சியின் போது தான் டோவினோ தாமஸ் (Tovino Thomas) மோசமாக காயமடைந்ததாகவும் அவரது மேலாளர் கூறியதாக அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதிகமான வலி ஏற்பட்டதால் அவர் அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டோவினோவின் மேலாளர், “ஆரம்பத்தில் நாங்கள் அனைவரும் இது ஒரு சிறிய காயம் என்று நினைத்தோம். ஆனால் நேற்று டோவினோ வலி மிகவும் மோசமாகிவிட்டதாக உணர்ந்தார். அவருக்கு உள் காயம் இருப்பதாக மருத்துவர்கள் குறினார்கள். இதனால் அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. இருப்பினும், டொவினோ தாமஸ் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ALSO READ: இயக்குனர் `ஜெயம்' ரவியோட முதல் படம்...யோகி பாபு வெளியிட்ட தகவல்

31 வயதான டோவினோ தாமஸ் 2012 இல் மலையாள திரைப்படமான ‘பிரபுவின்டே மக்கள்’-ல் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டில் ‘என்னு நிண்டே மொய்தீனில்’ நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் (Filmfare Award) பெற்றார். 2017 ஆம் ஆண்டில் வெளியான மாயாநதியில் நடித்ததற்காக கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதையும் வென்றார். தற்போது அவர் காலா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

டொவினோ தாமஸ் மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இவர் நடித்த கோதா, அபியம், அனுவம்  போன்ற படங்கள் பெறும் வரவேற்பை பெற்றன. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

'காலா' (Kala) ரோஹித் வி.எஸ். –ஆல் இயக்கப்படுகிறது. படத்தின் கதையை யது புஷ்பகரன், ரோஹித் வி.எஸ் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த படத்தில் டோவினோ தாமஸ், லால், திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

ALSO READ: ‘நிறம் தாண்டி நிஜம் பார்ப்போம்’: Bigg Boss வீட்டில் நிலவாய் ஜொலிக்கும் நிஷா!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News