மம்மூட்டி (Mammootty) அவர்கள் இந்தியாவின் பழைய திருவாங்கூர்-கொச்சின் மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 செப்டம்பர் 1949 அன்று பிறந்தார். இவரது தந்தை இஸ்மாயில் ஒரு விவசாயி மற்றும் தாய் பாத்திமா இல்லத்தரசி. இரண்டு தம்பிகளுக்கு அண்ணனாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் கொச்சியில் தனது பட்டப்படிப்பை படிப்பை முடித்தார். அவர் ஒரு சட்டம் படித்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா ஆசையின் காரணமாக தனது 20வது வயதில் "Anubhavangal Paalichakal" என்ற படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார். காலங்கள் கடந்த படங்களின் எண்ணிக்கை கூடியது, நடிப்பில் புகழின் உச்சிக்கு செல்லத் தொடங்கினர். இவர் நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 400 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
ALSO READ | "Family" : வீட்டிலிருந்தே மம்முட்டியை இயக்கிய துல்கர் சல்மான்.....
மம்மூட்டி (Mammootty) பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். மேலும் மூன்றுமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு முறை மாநில விருதுகள் மற்றும் எட்டுமுறை பிலிம்பேர் விருதுகள் ஆகியவை பெற்றுள்ளார்.. 1998 இல், இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.
மும்மூட்டி, கேரளா முழுவதும் மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார், மேலும் அக்ஷயா திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் இருக்கின்றார். அவரது மகன் துல்கர் சல்மான் ( Dulquer Salmaan) தற்போது உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டாலும் மெகா ஸ்டார் இன்றளவும் இளம் கதாநாயகர்களின் சிம்மசொப்பனமே என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகர் என்றபோது கேரளத்திற்கு இணையாக இவருக்கு தமிழில் ரசிகர் பட்டாளம் அதிகம்.
1990ம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் என்ற படமே இவர் தமிழில் நடித்த முதல் படம். தளபதி, அழகன், கிளிப்பேச்சு கேட்கவா போன்ற படங்கள் தொடங்கி பேரன்பு வரை தமிழ் மக்களை மகிழ்வித்து வருகிறார்.
இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலன்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
As an artist for subtle realistic
realised performance,
contributor,
successor both mainstream popular cinema & artistic movies.
You are a big book for us.
we leant from you.
Wish you a happy birthday to our legend
Mega star @mammukka sir #HBDMammootty #HBDMammukka pic.twitter.com/w1pzpD2lrz— Seenu Ramasamy (@seenuramasamy) September 7, 2020
My dear Ichakka..wish you a Happy Birthday and many more to come...Love you always....God bless #HappyBirthdayMammukka pic.twitter.com/orTNCOMb7H
— Mohanlal (@Mohanlal) September 7, 2020
ALSO READ | சூப்பர் ஸ்டாருக்கு நன்றி தெரிவித்தார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!
Happy birthday Mammukka! @mammukka pic.twitter.com/E4EbRHlYgf
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) September 7, 2020
Happy Birthday Mammukka @mammukka #HappyBirthdayMammukka pic.twitter.com/BCAW3c4XvU
— Tovino Thomas (@ttovino) September 7, 2020