மீனாட்சி பொண்ணுங்க: வெற்றியுடன் பூஜாவுக்கு கல்யாணம்.. புஷ்பா போடும் மாஸ்டர் பிளான்

Meenakshi Ponnunga Today's Episode Update: வெற்றியுடன் பூஜாவுக்கு கல்யாணம்.. புஷ்பா போடும் மாஸ்டர் பிளான் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 4, 2023, 11:45 AM IST
  • மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்.
  • வெற்றியுடன் பூஜாவுக்கு கல்யாணம்.
  • புஷ்பா போடும் மாஸ்டர் பிளான்.
மீனாட்சி பொண்ணுங்க: வெற்றியுடன் பூஜாவுக்கு கல்யாணம்.. புஷ்பா போடும் மாஸ்டர் பிளான் title=

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.

மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பூஜா சக்தியின் தாலியை பறிக்க வர ஷக்தி அவளை பளாரென அறைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | ரஜினிக்கு 150 கோடி! அப்போ தமன்னாவிற்கு எத்தனை கோடி? ஜெயிலர் படக்குழுவின் சம்பள விவரம்..!

அதாவது, ரங்கநாயகி சரளா சம்மந்திகளாக தட்டை மாற்றிக் கொள்கிறார்கள். அடுத்ததாக பூஜா வெற்றியை அழைத்து கொண்டு ஆடி விரதம் செய்ய கோவிலுக்கு செல்கிறாள், அங்கு பூஜாவுக்கு வெற்றி பொட்டு வைக்கும் சடங்கு நிகழ்த்த வேண்டும். 

ஆனால் அந்த சடங்கு சக்திக்கு தான் செய்ய வேண்டும் என்பதால்,  திடியனும் கிரியும் திட்டமிட்டு அங்கு ரோகித்தை வரவழைக்க, ரோகித்தை பார்த்ததும் பூஜா தூண் மறைவில் ஒளிந்து கொள்ள அந்த நேரத்தில்,சக்தி அங்கு வந்து விட சக்திக்கு வெற்றி சடங்கு செய்கிறான். 

இதனை தொடர்ந்து சடங்கு முடித்ததும் சக்தி ஆட்டோவில் ஏறி செல்லுவதை அங்கு வந்த சங்கிலியும் புஷ்பாவும் பார்த்து விடுகிறார்கள். இதை பூஜாவிடம் சொல்ல பூஜாவுக்கு போன் செய்து சொல்ல அடுத்து அவள் செல்வம் முருகனின் உதவியாளரிடம் இது பற்றி கேட்க சக்தி இங்கு தான் இருக்கிறாள் என்று சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக புஷ்பா பூஜாவிடம் வெற்றியை வைத்து உன் கழுத்தில் இந்த கோவிலில் தாலி கட்ட சொல்கிறேன், அப்போது தெரியும் வெற்றி மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது உனக்கு தெரியும் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மீனாட்சி பொண்ணுங்க: : சீரியலை எங்கு பார்ப்பது?

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | எந்திரன் முதல் கஜினி வரை..ஹாலிவுட் படங்களை பார்த்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News