விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Sai Dharma Tej Accident:  சுயநினைவை இழந்த நிலையில், அவர் மாதப்பூரில் உள்ள மெடிகோவர் மருத்துவமனையில் (Medicover Hospital) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 10, 2021, 11:51 PM IST
  • கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் செல்லும் இருக்கும் போது விபத்து.
  • சுயநினைவை இழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதி.
  • கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சிகளை பார்வையிஸ்டும்`பார்வையிடும் போலீசார்.
விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Sai Dharma Tej Accident: மெகா ஹீரோ தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் சாலை விபத்தில் படுகாயம். ஹைதராபாத், மாதாப்பூரில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றுக்கொண்டு இருக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

சுயநினைவை இழந்த நிலையில், அவர் மாதப்பூரில் உள்ள மெடிகோவர் மருத்துவமனையில் (Medicover Hospital) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

தற்போது கிடைத்துள்ள அறிக்கையின்படி, அதிர்ச்சி காரணத்தால் மட்டுமே அவர் சுயநினைவில்லாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு (Apollo Hospitals) மாற்றப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் உடலில் இரத்தக்கசிவு எதுவும் இல்லை. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

சாய் தரம் தேஜ் தனது ஸ்போர்ட்ஸ் பைக்கை அதிவேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து இரவு 8.30 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தார். 

நடிகர் சாய் தரம் தேஜ் தனியாக பைக் ஓட்டி சென்றாரா அல்லது ஒரு குழுவாக சென்றார்களா என்பதை அறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சிகளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி (Megastar Chiranjeev) , அவரது சகோதரரும் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், அல்லு அரவிந்த், சாய் தரம் தேஜ்ஜின் இளைய சகோதரர் வைஷ்ணவ் தேஜ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News