தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், சமந்தா. இவரும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தனது முன்னாள் பார்ட்னர் குறித்து சமந்தா கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா-நாக சைதன்யா:
ரசிகர்களால் திரைக்கு முன்னாலும் பின்னாலும் அதிகம் விரும்பப்பட்ட ஜோடி, சமந்தா-நாக சைதன்யா. இவர்கள் இருவருக்கும் கதாநாயகன்-கதாநாயகியாக முதன் முதலாக நடிக்க கிடைத்த படம், யே மாயா சேசாவே. தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான படம்தான் அது. இவர்கள், விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் துணை நடிகை-நடிகர்களாக நடித்திடிருப்பர். அப்படத்தின் போது நல்ல நண்பர்களாக பழகிய இவர்கள், பின்னர் வெவ்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்து வெவ்வேறு நபர்கள் மீது காதல் கொண்டிருந்தனர்.
காதல்..திருமணம்..பிரிவு..
சமந்தாவும் நாக சைதன்யாவும் மஜிலி, மனம், ஆட்டோ நகர் சூர்யா உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படங்களில் நடித்து கொண்டிருந்த போது இருவரும் காதல் வயப்பட்டு, டேட்டிங் செய்து வந்தனர். இதையடுத்து, இவர்கள் அக்டோபர் 6ஆம் தேதி, 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, தெலுங்கின் ஸ்டார் குடும்பமான அக்கினேனி குடும்பத்தில் முக்கிய உறுப்பினராக மாறினார், சமந்தா. இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. இவர்கள் ஒன்று சேர்ந்து நடித்த மூன்று படங்களும் வெளியாகின. இதையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு ரசிகர்களுக்கு தங்களது சமூக வலைதள பக்கத்தின் மூலம் சமந்தாவும் நாக சைதன்யாவும் தாங்கள் பரஸ்பர விவாகரத்து பெற்றுக்கொள்வதாக அறிவித்தனர். இது பலருக்கும் பெரிய ஷாக்காக அமைந்தது.
மேலும் படிக்க | சலார் திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது
விவாகரத்திற்கான காரணம்..
நடிகை சமந்தா, 2021ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார். இவர், இதில் கவர்ச்சியாக நடனமாடியதுதான் சமந்தா-நாகசைதன்யா விவாகரத்திற்கு காரணமாக அமைந்ததாக பரவலாக தகவல்கள் பரவியது. ஆனால் இது குறித்து இருவருமே கேமரா முன் எங்கும் பேசவில்லை. இதையடுத்து பல நாள் கழித்து தங்களின் விவாகரத்துக்கான காரணம் குறித்து சூசகமாக கூறியுள்ளார் சமந்தா. அவர் கூறிய விஷயம் என்ன தெரியுமா?
இன்ஸ்டாகிராமில் பதிலளித்த சமந்தா..
சமந்தா, தனது சமூக வலைதள பக்கத்தில் படு ஆக்டிவாக உள்ளார். அவர் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதுண்டு. அப்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு சமந்தா பதிலளித்துள்ளார். அதில், “உங்கள் வாழ்க்கையை ரீலாக எடுத்தால் அதில் எந்த ப்ளூப்பரை பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள்? அதிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?” என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சமந்தா, தந்து விருப்பு-வெறுப்புகளை புரிந்து கொள்ளாததை தனது வாழ்வின் மிகப்பெரிய தவறாக கருதுவதாக கூறியுள்ளார். மேலும், அதில் தன்னுடை பார்ட்னரின் தாக்கம் அதில் அதிகமாக இருந்ததாகவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களின் யூகம்…
சமந்தாவின் இந்த பதில் அவரது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. தெலுங்கு திரையுலகின் பணக்காக குடும்பமான அக்கினேனி குடும்பத்தில் இருந்த சமந்தா, புஷ்பா படத்தில் நடனமாடியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல, அவரது குடும்பத்தாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் என்றும் அதை சமந்தா மீறியதுதான் இந்த விவாகரத்திற்கு காரணமாக இருக்கும் என்றும் பேசிக்கொள்கின்றனர். மேலும், நாக சைதன்யா சமந்தாவை தனது கண்ட்ரோலில் வைத்திருந்தாரோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | தனுஷ் உடன் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகரின் மகன்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ