நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியாக கொடுத்த ’புத்தாண்டு’ சர்பிரைஸ்

ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியாக நன்றி தெரிவித்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 11:30 AM IST
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியாக கொடுத்த ’புத்தாண்டு’ சர்பிரைஸ் title=

புத்தாண்டையொட்டி, ரௌடி பிக்சர்ஸ் சார்பில் ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள இருவரும், 2021 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்துக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததாக தெரிவித்துள்ளனர். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவும், அன்பும் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா, தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் ஆண்டே வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருப்பதாக மகிழ்ச்சியோடு கூறியுள்ளனர்.

ALSO READ | Valimai trailer: சிவகார்திகேயன் முதல் விக்னேஷ் சிவன் வரை கொடுத்த ரியாக்ஷன்..! 

'கூழாங்கல்' திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ’டைகர்’ விருது பெற்றதும், ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்பட போட்டிப் பிரிவில் இடம்பெற்றதும், ரௌடி பிக்சர்ஸைப் பெருமையடையச் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ALSO READ | Valimai Trailer: "GAME ON"..வெளியானது ’வலிமை’ டிரெய்லர்..! அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

மேலும். நெற்றிக்கண், ராக்கி திரைப்படங்களுக்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் மூலம் அவை தங்கள் நிறுவனத்துக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்ததாக பெருமையுடன் இருவரும் கூறியுள்ளனர். அடுத்த ஆண்டில் காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், வாங்கிங், டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், ஊர்குருவி ஆகிய 4 புதிய படங்களுடன் ரௌடி பிக்சர்ஸ் களத்தில் இறக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா மகிழ்ச்சியொடு தெரிவித்துள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News